முகப்பு /ராமநாதபுரம் /

'வந்தாச்சு புயல்' ராமநாதபுரம் மக்களே உஷார்.. 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

'வந்தாச்சு புயல்' ராமநாதபுரம் மக்களே உஷார்.. 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் புயல் கூண்டு ஏற்றம்

Ramanathapuram | பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றி படகுகளை பாதுகாப்பாக நிறுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

பாம்பன் மீன்பிடி துறைமுகம் அருகே உள்ள துறைமுக அலுவலகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டானது ஏற்றப்பட்டுள்ளதால் நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லமாமல் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி உள்ளனர்.

தென்கிழக்கு வங்காளவிரிகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்று அழுத்த தாழ்வு பகுதியானது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி இதற்கு மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய‌ பகுதியில் மூன்று நாட்களுக்கு மழை பெய்யும் எனவும், கடலில் காற்றானது மணிக்கு 50 முதல் 80 கிலோமீட்டர் வேகத்தில் வீசி மோசமான வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க | பாம்பன் பாலத்தை கடந்து சென்ற பாய்மரக்கப்பல்.. கண்டு ரசித்த மக்கள்!

இதையடுத்து, ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டை தமிழ்நாடு கடல்சார் வாரியம் துறைமுக அதிகாரிகள் ஏற்றுள்ளனர். இதனால் உள்ள விசைப்படகுகள் அனைத்து பாதுகாக்காப்பாக நங்கூரமிட்டு நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Cyclone, Local News, Ramanathapuram, Strom