Home /ramanathapuram /

₹16 கோடி செலவில் பாம்பன் பாலம் சூப்பரா ரெடி ஆகுது..

₹16 கோடி செலவில் பாம்பன் பாலம் சூப்பரா ரெடி ஆகுது..

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - பாம்பன் பாலம்

Ramanathapuram Pamban Bridge | தேசிய நெடுஞ்சாலை துறையால் 2,340 மீட்டர் கொண்ட பாம்பன் பாலத்தில், 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram | Rameswaram
ராமநாதபுரத்தை, ராமேஸ்வரத்துடன் இணைக்கும் பாம்பன் சாலை  பாலத்தை புதுப்பிக்கும் பணி  ரூ.16 கோடி செலவில் நடைபெற்று வருகிறது. பாம்பன் பகுதியில் கடலுக்குள் புதிய நான்கு வழி சாலை  பாலம் விரைவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ள நிலையில் தற்போது இருக்கக்கூடிய பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரம் தீவையும் மண்டபம் நிலப்பரப்பையும் இணைக்கும் வகையில் 1914 ஆம் ஆண்டு ரயில் பாலம் கட்டப்பட்டு ரயில் சேவை தொடங்கியது, அன்று முதல் ராமேஸ்வரம் பகுதியில் ரயில் சேவை மட்டுமே இருந்து வந்தது.

இதையடுத்து, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு ராஜீவ் காந்தியால் 1988ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பாலத்தில் சாலைப் போக்குவரத்து தொடங்கியது,

ராமேஸ்வரத்திற்கு ரயில் மற்றும் வாகனங்கள் மூலம் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர், இந்த நிலையில் தற்போது  புதிய ரயில்வே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது , அதேபோல தேசிய நெடுஞ்சாலைத் துறையால்  நான்கு வழிச்சாலை வசதியுடன் கூடிய புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது,

தற்போது ரயில்வே துறையால் பாம்பன் ரயில் புதிய பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில் , தேசிய நெடுஞ்சாலை துறையால் 2,340 மீட்டர் கொண்ட பாலத்தை 16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஜந்து வருடங்களுக்கு ஒருமுறை பாலத்தை பராமரிப்பு செய்வது வழக்கம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போது பாலத்தில் உள்ள தூண்கள் உள்ளிட்ட பல இடங்களில் உப்பு காற்றினால் கடலரிப்பு ஏற்பட்டு சிமெண்ட் காங்கிரீட் பூச்சுக்கள் சேதமடைந்துள்ளது, மேலும் உப்புக் காற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பூசப்பட்ட பெயிண்ட் மங்கிப் போய் அதன் தன்மையை இழந்துள்ளது,

இதனால் பாலத்தை சீர் செய்ய முடிவு செய்த தேசிய நெடுஞ்சாலைத் துறை ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பாலத்தின் தூண்கள் மற்றும் பல பகுதிகளில் ஏர் கம்ப்ரசர் மூலம் பெயிண்ட் பூச்சிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது, பின்னர் வண்ணம் பூசும் பணி நடைபெற உள்ளது.
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி