ஹோம் /Ramanathapuram /

Ramanathapuram : வயதானவர்கள் நடக்கமுடியவில்லை; குண்டும் குழியுமான சாலையால் அவதியுறும் நாலுபனை கிராமத்தினர்..

Ramanathapuram : வயதானவர்கள் நடக்கமுடியவில்லை; குண்டும் குழியுமான சாலையால் அவதியுறும் நாலுபனை கிராமத்தினர்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District : ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட நாலுபனை கிராமம் செல்லும் வழியில் இருக்கும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என மீனவகிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அடுத்த தங்கச்சிமடம் ஊராட்சிக்கு உட்பட்ட நாலுபனை கிராமத்தில் குண்டும் குழியுமான சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளது.

  நாலு பனை கிராமத்தில் நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்களின்‌ பிரதான‌ கிராம கடலுக்கு சென்று மீன்பிடிப்பது. இந்த கிராமத்தில் 60 வருடத்திற்கு மேலாக இந்த கிராமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

  தேசிய நெடுஞ்சாலையிலிருந்து நாலு பனை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள சாலை புதிய சாலை அமைப்பதற்காக உடைக்கப்பட்டது. உடைக்கப்பட்ட பின்பு புதிய சாலை அமைக்காமல் அப்படியே விட்டதால் குண்டும் குழியுமாக சாலை மாறிவிட்டது.

  பள்ளி மாணவர்கள் அவ்வழியாக தான் பள்ளிக்கு செல்கின்றனர் மற்றும் சிறிய முதல் பெரியவரை வேலைக்கு செல்பவர் வழியாகத்தான் செல்கின்றன. வாகனங்களில் செல்லும் போது வாகன ஓட்டிகள் சேதமடைந்த சாலைகள் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். இச்சம்பவம் தொடர்ச்சியாகவே நடந்து வருகின்றது.

  இதையடுத்து, ஊராட்சி மன்ற தலைவரிடம் மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் ஓட்டுக்கு வாக்கு கேட்டு வருபவர்களிடமும் பலமுறை மனு கொடுத்தும் கோரிக்கை வைத்துள்ளோம். அப்பொழுது மட்டும் சரி செய்து விடுகிறோம் என்று சொல்லிவிட்டு புதிய சாலை அமைத்து தருவோம் என்று கூறுகின்றனர் அதற்கு பின்பு இதைக் கண்டுகொள்வதே கிடையாது.

  வயதான காலத்தில் வேலைக்கு செல்லும்போது சாலையில் தட்டி கீழே விழுந்து கை கால்களில் காயம் ஏற்படுகிறது. மின் விளக்குகளும் சரியாக எரிவது கிடையாது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து எனது கிராமத்திற்கு சேலம் அந்த சாலையை சீரமைத்து புதிய சாலை அமைத்து தர வேண்டும் என்று கிராம மக்கள் சார்பாக கேட்டுக் கொண்டனர்.

  செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.

  Published by:Arun
  First published:

  Tags: Ramanathapuram