ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனில் தனது 12 வயதில் இருந்து கருவாட்டு வியாபாரம் செய்யத்தொடங்கி தற்போது 50 வயதினை கடந்தும் தன்னுடைய கருவாட்டிற்கு பாம்பன்பகுதியில் ஒரு தனிசிறப்பை உருவாக்கியதுடன்மாவட்டம் முழுவதும் வியாபாரம் செய்து கொண்டிருக்கும் ராணியம்மாள் கருவாட்டு கடை குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்..
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து பாம்பன் பாலத்தில் இறங்கி தெற்குவாடி துறைமுகம் செல்லும் வழியில் ஜெயில் தெரு பகுதியில் அமைந்துள்ளது ராணியம்மாவின் இந்த கருவாட்டு கடை.
12 வயதில் தொடங்கிய கருவாடு பிசினஸ்:
இந்த கடையின் உரிமையாளர் ராணியம்மாள் தன்னுடைய பெற்றோர்களுடன் சேர்ந்து தன்னுடைய பன்னிரண்டு வயதில் இருந்து மீன்களை கருவாட்டாக மாற்றி அதனை மற்றவர்களை விட தனித்தனியான கருவாடாக மாற்றி மாவட்ட முழுவதும் விற்பனை செய்யத்தொடங்கி உள்ளார்.
தற்போது 50 வயதினை கடந்தும் மூன்று பெண்களை வைத்து ஒரு கருவாடு கம்பெனியை நடத்தி வருகிறார். ராமேஸ்வரத்தில் விசைப்படகில் மீன்கள் பிடித்து வந்த பிறகு தனக்கு தேவையான மீன் வகைகளை டன்கணக்கில் வாங்கிக் கொண்டு அதனை ராமேஸ்வரத்தில் உள்ள கம்பெனிகளில் காய போட்டு எடுத்து இரண்டு நாட்களுக்கு அடுத்து பாம்பனுக்கு கொண்டுவந்து காயவைத்து முழு கருவாடாக்குகின்றனர்.
கருவாடு கம்பெனி:
அதன்பிறகு மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளுக்கும் வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர். ராணியம்மாள் பரமக்குடியில் உள்ள சில கடைகளுக்கும் சந்தைகளிலும் கருவாடுகளை கொண்டு சென்று விற்பனை செய்து வருகிறார். மேலும், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இவரிடம் வந்து வாங்கி செல்கின்றனர்.
சுற்றுலா பயணிகள்:
யாரையும் எதிர் பார்க்காமல் மனநிம்மதியாகவும், மன நிறைவாகவும் கிடைக்கின்ற வருமானத்தை வைத்து வாழ்ந்து வருவதாகவும் கூறினார். கருவாடுகளை பார்சல் அனுப்ப முடியாது என்றும், நேரடியாக வருவோர்க்கு தரமான கருவாடாகவும், குறைந்த விலையில் தருவதாகவும் கூறுகிறார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ராணியம்மாவின் மனக்குமுறல்:
பேருந்துகள் கருவாடுகளை ஏற்றிச்சென்றால் நடத்துனர் ஏற்றுவது இல்லை என்றும், நடத்துநர் ஏற்றினால் பயணிகள் கருவாடு என்றால் மூக்கைப்பிடிப்பதாகவும், அருகில் அமர இடம்கூட குடுப்பதில்லை என்று வருந்துகின்றார். பெண்களாக ஒவ்வொரு பகுதியாக சென்று உழைத்து தான் வியாபாரம் செய்கிறோம், அரசு இதற்கொரு நடவடிக்கை எடுத்து பேருந்துகள் இடையூறு இன்றி பயணம் செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றார்...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram