முகப்பு /ராமநாதபுரம் /

பாலை மீன் பிடிக்க அனுமதி வேண்டும் - மீன்களுடன் ஆட்சியரிடம்  மனு அளித்த பாம்பன் பகுதி மீனவர்கள்! 

பாலை மீன் பிடிக்க அனுமதி வேண்டும் - மீன்களுடன் ஆட்சியரிடம்  மனு அளித்த பாம்பன் பகுதி மீனவர்கள்! 

X
பாம்பன்

பாம்பன் பகுதி மீனவர்கள்

  • Last Updated :
  • Ramanathapuram, India

பாம்பன் கடல் பகுதியில் பாலை மீன்பிடிக்க தடை விதிப்பதால் தடையை நீக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் பாலை மீன் குஞ்சுகளுடன் மீனவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் பகுதியில் உள்ள தோப்புக்காடு, நடுத்தெரு, தெற்குவாடி ஆகிய மீனவ கிராமங்களைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நீர்பெருக்கெடுத்து ஓடும் நேர்த்தில் நிலத்திற்கு அடியில் வரும் பாலை மீன்களை பிடித்து கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வாழ்வாதாரம் ஈட்டி வந்தனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்றுமதியாளர்கள் தங்களிடம் இருந்து மீன்களை குறைந்த விலைக்கி வாங்கி, அதிக விலைக்கு கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க

இதனால் பாலை மீன்களை தற்போது மீனவர்கள் தாங்களே நேரடியாக கேரளாவிற்கு ஏற்றுமதி செய்ய பணியை தொடங்கினர், இதனால் ஆத்திரமடைந்த ஏற்றுமதியாளர் மீன்வளத்துறை அதிகாரிகளை தூண்டிவிட்டு பாலை மீன்களை பிடிக்க விடாமல் தடுப்பதாக கூறப்படுகிறது.

top videos

    இதையடுத்து, வருடத்திற்கு மூன்று மாதத்திற்கு மட்டும் பிடிக்கும் பாலை மீன்களை பிடித்து வாழ்வாதாரம் பெறவேண்டும் என்று மீனவர்கள் பாலை மீன்குஞ்சுகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு மனு அளித்து சென்றனர் .

    First published:

    Tags: Fisherman, Local News, Ramanathapuram