ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு, டன் கணக்கில் சிக்கியன, திருக்கை மீன் வகைகளில் ஒன்றான இரட்டை சங்குவாய் திருக்கை மீன்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து வழக்கம்போல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று கரை திரும்பினர். பின்னர், மீனவர்கள் வலையில் இரண்டு டன்னில் இருந்து ஐந்து டன் வரை திருக்கைமீனின் ஒரு வகையான இரட்டை சங்குவாய் திருக்கை மீன் சிக்கியிருப்பது தெரிய வந்தது.
இந்த மீனின் தோற்றமானது, வவ்வால் போன்று முகத்தோற்றம் கொண்டிருக்கும், இதன் வாய் ஊசியாக இருக்கும். எதிரிகளிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள பயன்படுத்தும் வாளானது நீளமாகவும், மெல்லியதாகவும் இருக்கும். இதன் வால் தான் திருக்கை மீன்களின் பெரியதாகும்.
இது மருத்துவகுணம் நிறைந்ததாகும். இந்த மீனை சாப்பிட்டால் இடுப்பு வலி, குருக்கு வலி சரியாகும். கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டால் நல்லது என்கின்றனர் மீனவர்கள்.
பொதுவாகவே மற்ற மீன்களை விட இதன் சதை சற்று கடினமாக இருக்கும். பொதுவாகவே திருக்கைகள் நல்ல சுவை கொண்டவை.
மன்னார் வளைகுடா கடலில் 100 அடி ஆழம் முதல் 200 அடி ஆழத்தில் வாழக்கூடியவை. மண்ணில் புதைகொண்டு மறைந்திருந்து வாழ்பவை. திருக்கை இனங்களில் மிகவும் அரிதாக பிடிபடக்கூடியது இந்த சங்குவாயன் திருக்கை மீன். இதனை "ஹிமாண்டுறா டுடுள்" என்று என்ற இனத்தைச் சேர்ந்தவை என்கின்றனர்.
இவை இந்திய பெருங்கடலில் மன்னார் வளைகுடா கடல், இந்தோ மலாய் தீவு, சுலுகடல், பாலிகடல், தான்சானியா கடல் பகுதியில் வாழக்கூடியவை. ஒரு கிலோ மீனானது ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனையாகிறது.
இது பாம்பனில் இருந்து உணவுக்காகவும் கருவாட்டிற்காகவும், தமிழ்நாட்டில் உள்ள பிற மாவட்ட உணவகங்களுக்கும், கேரளாவிற்கும் விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.
பாம்பன் பகுதியில் ஒன்றரை டன் வரையிலும் இந்த மீன் கிடைத்திருப்பது மீனவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Fish, Local News, Pregnant, Ramanathapuram