முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / போலி பனங் கருப்பட்டிகளை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை

போலி பனங் கருப்பட்டிகளை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை

போலி பனங் கருப்பட்டிகளை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்... பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை

போலியாக பனங்கருப்பட்டிகளை தயார் செய்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

மாநிலம் முழுவதும் கலப்பட பனங்கருப்பட்டி விற்கப்படுவதால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பனைத் தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நோய் எதிர்ப்புச் சக்தியும் சுண்ணாம்புச் சத்தும் அதிகளவில் கொண்டவை பனங்கருப்பட்டி. ராமநாதபுரம் மாவட்டத்தில் பனங்கருப்பட்டி தயாரிப்பில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொழிலில் பெரும்பாலும் குடும்பத்துடன் தொழிலாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

இப்பகுதியில் சுமார் 2 லட்சம் பனை மரங்கள் மூலம் பனங்கருப்பட்டி தயாரிப்பு நடைபெற்று வருகிறது. தினமும் அதிகாலை 3 மணி முதல் இரவு 9 மணிவரை குடும்பமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு நேரம் உழைத்து ஒரு நாளைக்கு ரூ.500- 600 வரை வருமானம் மட்டுமே கிடைக்கின்றன. மேலும் பனங்கருப்பட்டிகளுக்கு கிலோவுக்கு ரூ.170 மட்டுமே கிடைக்கிறது என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும் போலியான பனங்கருப்பட்டி விற்பனை அதிகரித்துள்ளதால் தங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

' isDesktop="true" id="993912" youtubeid="hFnvoammDGc" category="ramanathapuram">

மேலும், தங்களிடம் இருந்து தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து நியாயவிலை கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று ராமநாதபுரம் பனைத் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Ramanathapuram, Sweaty Palm