முகப்பு /ராமநாதபுரம் /

விளை மீன் வகைகளில் இது தான் முதல் தரம்.. அரிதான ஓரியா (Emperor) மீனின் மகிமைகள்..

விளை மீன் வகைகளில் இது தான் முதல் தரம்.. அரிதான ஓரியா (Emperor) மீனின் மகிமைகள்..

X
ஓரியா

ஓரியா மீன்..

Vilai Meen (Emperor Fish): ஆங்கிலத்தில் Emperor என அழைக்கப்படும் ஓரியா  மீனானது ருசியான மீன் என்று மீனவர்கள் கூறுகின்றனர். இந்த மீன் குறித்து பாம்பன் மீனவர்கள் கூறுவதை கேட்போம்..

  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram | Rameswaram

மன்னார் வளைகுடா தென்கடல் பகுதியில் வாழக்கூடிய, அரிதாக மீனவர்களின் பிடியில் சிக்கும் ஒரியா என்கிற Emperor விளை மீனானது பாம்பன் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் சிக்கி உள்ளது, ஓரியா‌ மீனின்  சிறப்புகளை பற்றி அறிந்துகொள்வோம்.

பாம்பன் மீன்பிடி தெற்கு துறைமுகத்திலிருந்து மன்னர் வளைகுடா ஆழ்கடல், தென்கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க சுமார் 100க்கும் மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் சென்றனர். அப்போது  அவர்களுக்கு அரிதாக கிடைக்கக்கூடிய ஓரியா மீன் சிக்கியது, மற்ற மீன்களைப் போல முட்கள் இல்லாமல் நடுவில் மட்டும் முடுகு தண்டு போன்ற முள்ளுடைய  மீன் இது.

ஆங்கிலத்தில் Emperor என அழைக்கப்படும் ஓரியா  மீனானது ருசியான மீன் என்று கூறுகின்றனர். உடல் முழுவதும் சதைகளை உடையது. மற்ற மீன்களைப் போல முள் இல்லாமல் முதுகுத்தண்டு நடு முள் உடையதால் குழந்தைகளாலும் இந்த மீன் விரும்பப்படுகிறது.

Emperor Fish (ஓரியா மீன்.)

மருத்துவ குணங்கள்:

உடலுக்கு தேவையான பலத்தை  கொடுக்கும் என்பதால் இதயநோய், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதை சாப்பிடலாம். புரதச்சத்து நிறைந்தது. .

Emperor Fish (ஓரியா மீன்.)

இந்த மீனின் விலை கிலோ ரூ.300க்கு குறைந்ததே கிடையாது.  இங்கிருந்து மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் போன்ற  மாவட்டங்களில் உள்ள உணவகங்களுக்கும், கேரளா, தூத்துக்குடிக்கும் இவை அனுப்பி வைக்கப்படுகின்றன.

Emperor Fish (ஓரியா மீன்.)

இம்மீன் மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் நீந்திச் செல்லும் தன்மை உடையது. சிறு பாசி, நத்தை, மீன் குஞ்சுகள் இதன் உணவாகும். ஒரு மீனானது ஜந்து கிலோ வரையிலும் வந்துள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இம்மீனை சமைத்து சாப்பிடும்போது நல்ல ருசி கிடைக்கும். சிக்கலான முள் அமைப்பு இல்லாததால் குழந்தைகள் விரும்பி சாப்பிடக்கூடியது. இம்மீனின் செதில்கள் டைமண்ட் போன்ற தோற்றத்தை கொண்டிருக்கும்.

First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram