முகப்பு /ராமநாதபுரம் /

ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள்... பரமகுடியில் வேஷ்டி, சேலை வழங்கிய அ.தி.மு.கவினர்

ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள்... பரமகுடியில் வேஷ்டி, சேலை வழங்கிய அ.தி.மு.கவினர்

X
அதிமுகவினர்

அதிமுகவினர்

Ramanathapuram | பரமகுடியில் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாளை அ.தி.மு.கவினர் கொண்டாடினர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Paramakudi, India

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி சேலை வழங்கியும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியும் அ.தி.மு.கவினர் கொண்டாடினர்.

தமிழ்நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்தநாள் விழாவை அதிமுகவினர் வெகுசிறப்பாக கொண்டாடினர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நகராட்சி, ஊராட்சி, பேரூராட்சி, ஒன்றியங்கள் போன்ற பல்வேறு பகுதிகளிலும் அதிமுகவினரால் கொண்டாடப்பட்டது.

வேஷ்டி சேலை வழங்கும் அ.தி.மு.க

இதில் ஒரு பகுதியாக பரமக்குடியில் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பாக பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டதில், ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின் பரமக்குடி நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி மற்றும் சேலை வழங்கி உதவிகள் செய்யப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Ramanathapuram