ஹோம் /ராமநாதபுரம் /

என்னையா ஒதுக்குனீங்க.. இப்ப பாருங்க.. சைக்கிள் ஓட்டும் நன்மைகள் பதாகைகளுடன் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு

என்னையா ஒதுக்குனீங்க.. இப்ப பாருங்க.. சைக்கிள் ஓட்டும் நன்மைகள் பதாகைகளுடன் பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு

மிதிவண்டி ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து; பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு

மிதிவண்டி ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து; பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு

பரமக்குடியில் மிதிவண்டி ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து தனியார் பள்ளி மாணவர்கள் பதாகைகள் அமைத்து மிதிவண்டி ஓட்டிக்கொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

உலகம் முழுவதும் இன்று நவம்பர் 22- ஆம் தேதி உலக சவாரி தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதன்‌ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியான கவினா இன்டர்நேஷனல் பள்ளி சார்பில் மிதிவண்டி ஓட்டுவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த மிதிவண்டி விழிப்புணர்வு பேரணியில் 53 பள்ளி மாணவர்கள் பரமக்குடியில் அடுத்த ஓட்டப்பாலம் என்ற இடத்தில் இருந்து பாம்பூர் வரை மிதிவண்டி ஓட்டிக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த விழிப்புணர்வு பேரணியில் பதாகைகளில் மிதிவண்டியை ஒதுக்கி தள்ளிய காரணத்தினால், இன்சூரன்ஸ், பெட்ரோல் விலை உயர்வு மற்றும் இதனால் ஆரோக்கியம் குறைவு, எவன் மிதித்தாலும் உயரும் மிதிவண்டி போல் வாழுங்கள் உள்ளிட்ட பதாகைகளுடன் பள்ளி மாணவர்கள் சைக்கிள் பேரணி சென்றனர்.

ஓட்டப்பாலத்தில் தொடங்கி ஐந்து முனை பகுதி பேருந்து நிலையம் வழியாக நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பாம்பூரில் விழிப்புணர்வு பேரணி நிறைவடைந்தது.

Published by:Ramprasath H
First published:

Tags: Bicycle, Ramanathapuram, School students, Tamil News