முகப்பு /ராமநாதபுரம் /

ஏர்வாடி வனத்துறை சார்பில் சதுப்புநிலங்களை பாதுகாக்க பிளாஸ்டிக் சோதனை!

ஏர்வாடி வனத்துறை சார்பில் சதுப்புநிலங்களை பாதுகாக்க பிளாஸ்டிக் சோதனை!

X
பிளாஸ்டிக்

பிளாஸ்டிக் சோதனை

Ervadi Forest Department : ராமநாதபுரம் வனத்துறையினர் சார்பில் ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களை பாதுகாக்க ஏர்வாடியில் பிளாஸ்டிக் சோதனை சாவடி தொடங்கி மஞ்சப்பைகள் வழங்கப்படுகிறது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதிகளில் அரியவகை உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.மேலும், பறவைகள் சரணாலயம் போன்ற ராம்சார் அங்கீகாரம் பெற்ற இடங்கள் உள்ளதால், இதனைக்கான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருகின்றனர். இப்பகுதிகளை வனத்துறையினர் பாதுகாத்து வருகின்றனர்.

இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும் வனத்துறையினரும் இணைந்து ராம்சர் அங்கீகாரம் பெற்ற சதுப்பு நிலங்களை பிளாஸ்டிக் போன்ற கழிவுகளில் இருந்து பாதுகாக்க ஏர்வாடியில், தனுஷ்கோடியில் உள்ளது போன்று பிளாஸ்டிக் சோதனை சாவடியானது தொடங்கப்பட்டுள்ளது.

ஏர்வாடி வனத்துறை சார்பில் நடந்த பிளாஸ்டிக் சோதனை

இதையடுத்து, இந்த பிளாஸ்டிக் சோதனை சாவடியில் சுற்றுலா பயணிகள் வாகனங்களில் வருபவர்களிடம் பிளாஸ்டிக் பொருட்கள் வாங்கி கொண்டு அதற்கு பதிலாக சுற்றுச்சூழலுக்கு எந்தவொரு பாதிப்பும் தராத மஞ்சள் பைகள் வழங்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மேலும், 4 சக்கர வாகனத்திற்கு 20 ரூபாயும், கனரக வாகனத்திற்கு 50 ரூபாயும் கட்டணங்கள் வனத்துறையினர் சார்பில் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலமாக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் பிளாஸ்டிக் இல்லாத ஏர்வாடியை உருவாக்க புதிய முயற்சி எடுத்துள்ளனர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram