முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் உள்ள பழமையான மரபுசார் நீதிமன்றம்.. உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!

பரமக்குடியில் உள்ள பழமையான மரபுசார் நீதிமன்றம்.. உயர்நீதிமன்ற நீதிபதி ஆய்வு!

X
ஆய்வு

ஆய்வு செய்த நீதிபதி

Ramanathapuram News | ஆங்கிலேயர் காலத்தில் பரமக்குடியில் கட்டப்பட்ட பழமையான மரபுசார் நீதிமன்றம் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்தது.

  • Last Updated :
  • Paramakudi, India

ஆங்கிலேயர் காலத்தில் பரமக்குடியில் கட்டப்பட்ட பழமையான மரபுசார் நீதிமன்றம் புதுப்பிக்கப்பட்டு பயன்படுத்தப்படாமல் இருந்த நிலையில், உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ஸ்ரீமதி ஆய்வுகள் மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரை, தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளம், ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்றங்கள் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான பாரம்பரியமிக்க கட்டிடங்கள் ஆகும்.

இந்த மூன்று நீதிமன்ற கட்டிடங்களும் தலா ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டன. இதில் பெரியகுளம், மானாமதுரை ஆகிய இடங்களில் கட்டப்பட்ட கட்டிடங்கள் தற்போது பயன்பாட்டில் உள்ளன. ஆனால், பரமக்குடி மரபுசார் நீதிமன்றம் புதுப்பிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

இந்நிலையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஸ்ரீமதி மரபுசார் நீதிமன்றத்தினை ஆய்வு செய்து அதில் உள்ள பழமையான கட்டுமானங்களை பார்வையிட்டார்.

பழமையான இந்த கட்டிடம் சுண்ணாம்பு, மணல் ஆகியவற்றை மட்டுமே கொண்டு புனரமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

top videos
    First published:

    Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram