முகப்பு /ராமநாதபுரம் /

பேரன் என கூறி சிறுவனை கடத்த முயன்ற மூதாட்டி.. ராமநாதபுரத்தில் பரபரப்பு..

பேரன் என கூறி சிறுவனை கடத்த முயன்ற மூதாட்டி.. ராமநாதபுரத்தில் பரபரப்பு..

X
சிறுவனை

சிறுவனை கடத்த முயன்ற மூதாட்டி

Ramanathapuram News : ராமநாதபுரம் அங்கன்வாடி மையத்தில் சிறுவனை மூதாட்டி கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நகராட்சி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.  இந்நிலையில், இன்று முகமது ரயான் மைதீன் என்ற சிறுவனை மூதாட்டி ஒருவர் மதிய உணவு இடைவேளை நேரத்தில் அழைத்துச் செல்ல முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்த அங்கன்வாடி பணியாளர்கள் மூதாட்டியை பார்த்து சந்தேகமடைந்தனர். பின்னர் மூதாட்டியை நிறுத்தி அவரிடம் விசாரித்தனர். அப்போது, அவர்களிடம் தனது பேரன் தான் என மூதாட்டி கூறினார். இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் சிறுவனை மூதாட்டியிடம் அனுப்ப மறுத்துவிட்டனர். இதனால் மூதாட்டி சிறுவனை அங்கிருந்து இழுத்து செல்ல முயன்றார். ஊழியர்கள் மூதாட்டியை பிடித்து வைத்துக்கொண்டு பின்பு காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த பஜார் காவல் நிலைய போலீசார் மற்றும் சிறுவனின் பெற்றோர் மூதாட்டியை யார் என்று தெரியாது என்று கூறினர். இந்நிலையில், மூதாட்டியை போலீசார் அழைத்துச் சென்று மனநலம் பாதிக்கப்பட்டவரா? இல்லை கடத்தலில் ஈடுபட்டவரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுவனை கடத்த மூதாட்டி முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Crime News, Local News, Ramanathapuram