Home /ramanathapuram /

Ramanathapuram : கடலில் காற்றாலைகள்.. இந்தியாவின் முன்னோடி திட்டத்தினால் பெருமை கொள்ளப்போகும் தனுஷ்கோடி..

Ramanathapuram : கடலில் காற்றாலைகள்.. இந்தியாவின் முன்னோடி திட்டத்தினால் பெருமை கொள்ளப்போகும் தனுஷ்கோடி..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District : ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடல் பகுதியில் அதி நவீன கருவி பொருத்தப்பட்ட உயர் கோபுரம் அமைக்கப்பட்டு காற்றின் வேகம் குறித்த ஆய்வு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    மத்திய எரிசக்தி துறையின் சார்பில் தனுஷ்கோடி கடற்கரையில் ரூ.350 கோடி செலவில் கடல் பரப்பில் காற்றாலைகள் அமைக்கப்பட உள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகளவில் கிடைப்பதால் நன்மைகள் அதிகமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    மத்திய எரிசக்தித் துறை சார்பில் நாட்டின் 7,600 கிலோ மீட்டர் நீள கடற்கரை பரப்பில் காற்றின் வேகத்தை அளவிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தமிழகம், குஜராத் ஆகிய மாநிலங்களில் காற்று வீச்சு அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.

    இந்நிலையில், தமிழகத்தில் மன்னார் வளைகுடா தனுஷ்கோடி கடல் பகுதியில் மணிக்கு 30 கி.மீ. வேகத்திலும், குஜராத் மாநிலத்தில உள்ள கட்ச் வளைகுடா பகுதியில் மணிக்கு 25 கி.மீ. வேகத்திலும் காற்று வீசுவதாக ஆய்வில் தெரிய வந்தது.

    காற்றாலை


    இதையடுத்து,  ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடல் பகுதியில் அதி நவீன கருவி பொருத்தப்பட்ட உயர் கோபுரம் அமைக்கப்பட்டு காற்றின் வேகம் குறித்த ஆய்வு கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

    இதில் கிடைத்த புள்ளி விவரங்கள் அடிப்படையில் தனுஷ்கோடி கடலில் காற்றாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய எரிசக்தி துறையினர் தெரிவித்துள்ளனர்.

    தேசிய காற்றாலை ஆற்றல் நிறுவனம் (என்.ஐ.டபிள்யூ.இ) சார்பில் தனுஷ்கோடி கடலில் ரூ.350 கோடி செலவில் காற்றாலை நிலையத்தை அமைக்க உள்ளதாகவும், இதன் மூலம் 8 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காற்றாலைக்கான இயந்திரங்களை வாங்குவதற்கான டெண்டர் அடுத்த நான்கு மாதத்தில் விடப்பட உள்ளதாக மத்திய எரிசக்தி துறைஅமைச்சர் தெரிவித்துள்ளார்.

    ராமேஸ்வரம் கடல்பகுதி..


    காற்றாலை அமைவது குறித்து சமூகஆர்வலர் சுடலை கூறியதாவது:-

    நமது பகுதியில் இந்த காற்றாலை திட்டம் வர இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. மின்தட்டுபாடு ஏற்படுவதை அறவே தடுக்கமுடியும். தனுஷ்கோடி பகுதியில் வாழும் மீனவ மக்கள் மின்சார வசதி இல்லாமல் சோலார் பயன்படுத்தி மின்சார உற்பத்தியை மேற்கொள்கின்றனர். காற்றாலை அமைப்பதன் மூலம் அருகில் உள்ள தனுஷ்கோடி மீனவ மக்களுக்கு மின்சாரம் அரசு மூலமாக வழங்கப்படும்.

    இன்றைய சூழ்நிலையில் பெட்ரோல் டீசல் போன்ற எரி பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்நிய நாட்டில் இருந்து வாங்குவதால் இவ்வளவு விலை உயர்வு ஏற்படுகிறது. நிலக்கரி போன்ற அன்னிய செலவாணியை தவிர்க்க முடியும்.

    மேலும் இதனால் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் வாழக் கூடிய அரிய வகை கடல் உயிரினங்களுக்கு ஆபத்து என்று கூறுகின்றனர். கடற்கரையிலிருந்து 200 மீட்டர் தொலைவில் தான் இத்திட்டம் அமைகிறது, ஆழ்கடலில் தான் அரியவகை உயிரினங்கள் வாழ்கின்றன. ஆதலால் அரியவகை உயிரினங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இருக்காது.

    ராமேஸ்வரம் கடல்பகுதி..


    மேலும் இந்த திட்டம் அறிவியல் வல்லுனர்களால் பரிசோதிக்கப்பட்டு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாதவாறு தான் உருவாக்க உள்ளனர் அதனால் இதைப் பற்றி எந்த பயமும் தேவையில்லை.

    உள்நாட்டிலேயே தேவையான மின் உற்பத்தியை பெருக்கி கொண்டால் விலைவாசி உயர்வு ஏற்படாது. அந்நிய நாடுகளிலிருந்து வாங்குவதற்கு பதிலாக நம் நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வழங்க முடியும்  என்றார்..

    இந்தியாவில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே இது போல கடலுக்குள் காற்றாலை நிறுவும் திட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட இருப்பது ராமேஸ்வரம் பகுதி மக்களுக்கு பெருமை ஏற்படுத்தித் தர உள்ளது குறிப்பிடத்தக்கது..

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்‌.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி