ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம்... தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்...

ராமநாதபுரம் மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் திட்டம்... தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்...

X
எண்ணும்

எண்ணும் எழுத்தும் திட்ட பயிற்சி முகாம்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம்  தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் மூலம் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளின் கற்றலை மேம்படுத்தும் விதமாக தமிழக அரசு எண்ணும் எழுத்தும் திட்டம் தொடங்கி வைத்தது.

இந்த திட்டத்தின் மூலம் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையில் கல்வி கற்றலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : தனுஷ்கோடிக்கு சுற்றுலா போறீங்களா..! மறக்காம இதை எல்லாம் பார்த்துட்டு வாங்க..!

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 11 ஒன்றியங்களில் உள்ள 3,048 தொடக்கப்பள்ளி தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் திட்டம் மூலம் பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டு மூன்று நாட்கள் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியின் மூலம் மாணவ, மாணவிகள் புதிய திட்டத்தின் மூலம் கல்வி மேம்படுத்தும் விதமாக ஆசிரியர்கள் இணைந்து செயல்படுவது கல்வித்தரத்தை மேம்படுத்தும் என தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram