ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரத்தில் நாளை கிராம உதவியாளர்களுக்கான தேர்வு... எந்தெந்த இடங்களில் நடக்கிறது.. முழு விபரம்..

ராமநாதபுரத்தில் நாளை கிராம உதவியாளர்களுக்கான தேர்வு... எந்தெந்த இடங்களில் நடக்கிறது.. முழு விபரம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Ramanathapuram District News : ராமநாதபுரம் மாவட்டத்தில், கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை (4ம் தேதி) ஞாயிறுக்கிழமை தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டத்தில், கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாளை (4ம் தேதி) ஞாயிறுக்கிழமை தேர்வு நடைபெறும் இடங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கமுதி வட்டம், காடமங்கலம், நகரத்தார் குறிச்சி, கே.வேப்பங்குளம், கோவிலாங்குளம், பொந்தம்புளி, தவசிக்குறிச்சி, பெருநாழி ஆகிய 7 வருவாய் கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் நிரப்புவது தொடர்பாக, இணையதளம் வாயி லாக வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீ லனைசெய்து தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் கைபேசி எண்ணிற்கும், மின்னஞ்சல் முகவரிக்கும், குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது அனுமதி சீட்டினை http://agaram.tn.gov.in/onlineforms/formpage_open.php?id=43-174 என்ற இணையதள முகவரி மூலம் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளியை பொதுமக்கள் முற்றுகை.. அரசு பள்ளியாக மாற்ற கோரிக்கை..

இதையடுத்து, அப்பதவிக்கான திறனறி எழுத்து தேர்வு நாளை (4.12.22) ஞாயிற்றுக்கிழமை கமுதி ஷத்ரிய நாடார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் 11 மணி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் விண்ணப்பித்த நபர்களுக்கு தேர்விற்கான ஹால் டிக்கேட் பதிவிறக்கம் செய்வதற்கான லிங்க் அவரவர் அலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பட்டுள்ளது. அதில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வரப்பெற்ற விண்ணப்பங்களுக்குரிய விண்ணப்பதாரர்களுக்கு பதிவு அஞ்சல் வழியாக அனுமதி சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அனைவரும் தேர்வு நாளன்று காலை 9.30 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பதார்கள் தேர்வுக்கான ஹால் டிக்கேட் கொண்டுவர வேண்டும். விண்ணப்பதாரர்கள் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அனுமதிச் சீட்டு மற்றும் கருப்பு பால் பாயிண்ட் பேனாவை தவிர அலைபேசி, புத்தகங்கள், கைப்பைகள் மற்றும் வேறு எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தேர்வு மையத்திற்கு கொண்டு வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Ramnad