ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் மக்களே.. மின் விபத்தை தடுக்க இந்த எண்கள் நிச்சயம் உங்க மொபைலில் இருக்க வேண்டும்...

ராமநாதபுரம் மக்களே.. மின் விபத்தை தடுக்க இந்த எண்கள் நிச்சயம் உங்க மொபைலில் இருக்க வேண்டும்...

தமிழ்நாடு மின்சார வாரியம்

தமிழ்நாடு மின்சார வாரியம்

Ramanathapuram District News | வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதை முன்னிட்டு, ராமநாபுரத்தில் மின் நுகர்வோர் நேரடியாக புகார் தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதை முன்னிட்டு ராமநாபுரத்தில் மின் நுகர்வோர்களுக்கு, மின்சார வாரியம் சார்பில் புகார்களை நேரடியாக தெரிவிக்க செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்யும் முன்பே, பேரிடர் காலத்தில் மின் விபத்தை தடுக்கும் வகையில், மின் வயர்கள், அறுந்து விழுத்தல், மின் கம்பம் சாய்தல், மின் உபகரணங்கள் பழுதடைதல் உள்ளிட்டவைகளை கண்டுபிடித்து மின் துண்டிப்பு செய்ய மின் வாரிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இது தொடர்பாக அலுவலர்களை தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ராஜேஸ்வரி தெரிவித்துள்ளார். அதன்படி, அவர்களை தொடர்புகொள்ள செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கீழ் காணும் நபர்களை தொடர் கொண்டு நேரடியாக தொலைபேசியில் புகார் தெரிவிக்கலாம்.

ராமநாதபுரம் கோட்டம் முழுவதும் - செயற் பொறியாளர் இளங்கோ (94458 53033), ராமநாதபுரம் நகர், கீழக்கரை, தேவிபட்டினம், ரகுநாதபுரம் பகுதிகளுக்கு உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் (94458 52662) ராமநாதபுரம் ஊரகப்பிரிவிற்கு உட்பட்ட உச்சிப்புளி, பனைக்குளம், மண்டபம், ராமேஸ்வரம், உத்தரகோசமங்கை பகுதிகளுக்கு செயற்பொறியாளர் செந்தில்குமார் (94458 53324) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

Must Read : ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

பரமக்குடி கிராம பகுதி, சத்திரக்குடி, பார்த்திபனூர், நயினார்கோவில் பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் புண்ணிய ராகவன் (94458 53014); கமுதி நகர், கமுதி கிராம பகுதி, அபிராமம், பெருநாழி பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் விஜயன் (94458 53015); முதுகுளத்தூர், கடலாடி, வாலிநோக்கம், சிக்கல், சாயல்குடி பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் மாலதி (94458 53016) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், தொண்டி, ஆனந்தூர், நகரிகாத்தான் பகுதிகளுக்கு உதவி செயற்பொறியாளர் நிசாக் ராஜா (94458 52661), பரமக்குடி கோட்டம் முழுவதும் செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி (94458 53030), பரமக்குடி நகர் உப கோட்ட (முழுவதும்) உதவி செயற்பொறியாளர் கங்காதரன் (94458 52663) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Ramanathapuram, TNEB