ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குதினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்றுஆசிர்வாதம்செய்து, கோவிலின்விழாகாலங்களிலும், சுவாமி - அம்பாள் வீதிஉலா செல்லும் போதும் அலங்காரமாக வீதியுலாவிற்கு தலைமை ஏற்று நடந்து செல்லும் இந்த பவானி யானை. 60 ஆண்டுகளுக்கு மேல் இந்த யானையானது திருக்கோவிலிலிருந்து வந்தது.
இந்த யானையானது 2014-ம் ஆண்டு முதுமலைக்காட்டிற்கு முகாமிற்கு செல்லும் போது இறந்து ராமேஸ்வரம் பொதுமக்களையும் பக்தர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இறந்த யானையை ராமேஸ்வரம் கொண்டுவரப்பட்டு இந்துஅறநிலையத்துறைக்குசொந்தமான ராமநாதசுவாமி திருக்கோவிலின் வாகன நிறுத்துமிடம் அருகே புதைக்கப்பட்டது.
பவானியானையைபுதைக்கப்பட்ட பின் அந்த இடத்தில் அதன் நினைவாக மணிமண்டபம் அமைக்கப்படும் என அப்போதைய இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர். ஆனால் யானை புதைக்கப்பட்டு எட்டு வருடங்களுக்கு மேல் கடந்தும் தற்போது, அந்த இடத்தில் பராமரிப்பு இன்றிகருவேலம்மரங்கள் வளர்ந்து காணப்படுகிறது. சில நாட்களுக்கு முன் அந்த இடத்தில் நினைவு பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது அதுவும் தற்போது கிடையாது.
ALSO READ | இலங்கை கடற்படையால் இனி எந்த பிரச்சினையும் வரக்கூடாது.. மீனவர்கள் கோரிக்கை!
இந்நிலையில், தற்போதுள்ள இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும், கோவில் நிர்வாகமும், தமிழக அரசும்; பக்தர்கள், பொதுமக்கள் நினைவுகூரும் வகையில் மணிமண்டபம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Elephant, Local News, Ramanathapuram