முகப்பு /ராமநாதபுரம் /

நியூஸ்18 செய்தி எதிரொலி... ராமேஸ்வரத்தில் பக்தர்களின் பாதங்களை காக்க தேங்காய்நார்!

நியூஸ்18 செய்தி எதிரொலி... ராமேஸ்வரத்தில் பக்தர்களின் பாதங்களை காக்க தேங்காய்நார்!

X
நியூஸ்18

நியூஸ்18 செய்தி எதிரொலி... ராமேஸ்வரத்தில் பங்குனி உத்திரத்திற்கு பக்தர்களின் பாத

நியூஸ்18 செய்தி எதிரொலியாக,ராமேஸ்வரத்தில், கற்கள் நிறைந்து கிடந்த சாலையாது, பங்குனி உத்திரத்தன்று, காவடி எடுத்துவரும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் தென்னந்தும்பிகள் பரப்பப்பட்டது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

நியூஸ்18 செய்தி எதிரொலியாக, ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், பராமரிப்பின்றி கற்கள் நிறைந்து கிடக்கும் சாலையாது, பங்குனி உத்திரத்தன்று, காவடி எடுத்துவரும் பக்தர்களின் கால்களை பதம் பார்த்து காயங்கள் ஏற்படுத்தும் என்பதால், பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் சாலையில் தென்னந்தும்பிகள் (தேங்காய் நார்) பரப்படுகிறது.

முருகன் ஆலயங்களில், பங்குனி உத்திர திருவிழாவானது விமர்சியாக நடைபெற உள்ளது. பக்தர்கள் நேர்த்திக்கடனாக காவடிகள் எடுத்தும், பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உபகோவிலான சுப்ரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துவர்.

இந்நிலையில், பாதாளச்சாக்கடை திட்டத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டு, ராமர் தீர்த்தம் முதல் லெட்சுமணர் தீர்த்தம் வரையிலான பகுதிகள் கரடு முரடாக இருப்பதால் பக்தர்கள் கால்களில் காயங்கள் ஏற்படுத்தும் என்பதால், அன்று ஒருநாள் மட்டும் சாலைகளில் தென்னம்தும்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் பிறகு சாலையை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் சார்பில் நியூஸ் 18 உள்ளூர் செய்தி மூலம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையடுத்து, சேதமடைந்த சாலைகள் முழுவதும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், தென்னந்தும்பிகள் அமைக்கும் பணியில் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதற்கிடையே  செய்தி மூலம் அரசு கவனத்துக்கு கொண்டு சென்ற நியூஸ்18 தொலைக்காட்சிக்கும் நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாகத்திற்கு பக்தர்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram