முகப்பு /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் தரமற்று இருக்கும் புதிய சாலை.. பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ராமேஸ்வரத்தில் தரமற்று இருக்கும் புதிய சாலை.. பொதுமக்கள் குற்றச்சாட்டு!

X
ராமேஸ்வரத்தில்

ராமேஸ்வரத்தில் தரமற்று இருக்கும் புதிய சாலை

Rameswaram Road : ராமேஸ்வரம் துளசிபாபா மடத்தெருவில் நீண்டகால போராட்டத்திற்கு பிறகு 20 நாட்களுக்கு முன் அமைக்கப்பட்ட புதிய சாலை, இரவு பெய்த கனமழையில் பெயர்ந்து சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் லெட்சுமண தீர்த்தம் முதல் வேர்கோடு வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையானது பாதாள சாக்கடை திட்டத்திற்காக உடைக்கப்பட்டு நீண்ட நாட்களாக சாலை அமைக்காமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்நிலையில், கடந்த மாதம் கவர்னர் ராமநாதபுரம் வருகையால் ராமேஸ்வரம் வரக்கூடும் என்பதால் அப்பகுதியில் சாலை அமைப்பு பணி நடைபெற்றது. கவர்னர் ராமேஸ்வரம் வரவில்லை என தெறிந்தவுடன் அந்த பணி பாதியிலேயே நிறுத்தி லெட்சுமண தீர்த்தம் முதல் ராமர் தீர்த்தம் வரை மட்டுமே சாலையானது அமைக்கப்பட்டது.

ராமேஸ்வரத்தில் தரமற்று இருக்கும் புதிய சாலை

இந்த சாலையானது அமைத்து 20 நாட்கள் கூட தாண்டாத நிலையில் இரவு பெய்த மழையில் லெட்சுமணதீர்த்தம் எதிரே சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது, மேலும் ராமர் தீர்த்தம் பகுதியில் உள்ள சாலையில் சேதமடைந்து சிறிது சிறிதாக பெயர்ந்து பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

இந்த பள்ளத்தில் தற்போது மழைநீரானது தேங்கியுள்ளது. திடீரென பள்ளம் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் சாலையில் தடுமாறி செல்லும் நிலை உருவாகி உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மேலும், தரமற்ற சாலை அமைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதில், மாவட்ட நிர்வாகம் இதனை ஆய்வு செய்து தரமற்ற சாலையை அமைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram