ஹோம் /ராமநாதபுரம் /

பனை கூடைகளில் நெல்லை கருப்பட்டி.. தேசிய நெடுஞ்சாலையில் வியாபாரம் படுஜோர்..

பனை கூடைகளில் நெல்லை கருப்பட்டி.. தேசிய நெடுஞ்சாலையில் வியாபாரம் படுஜோர்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - கருப்பட்டி வியாபாரம்

Rameshwaram : மண்டபம் அருகே ராமேஸ்வரம்–மதுரை தேசிய நெடுஞ்சாலையில்  திருநெல்வேலி மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட கருப்பட்டி  விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. சீசன் காலத்தை விட விலை சற்று அதிகம் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram | Tirunelveli

ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மண்டபம் பகுதியில் கருப்பட்டி விற்பனை நடைபெற்று வருகிறது. பனை மரங்கள் அதிகம் கொண்ட திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு பகுதியில் தயாரிக்கப்பட்ட கருப்பட்டியை வாகனங்களில் வைத்து சாலை ஓரங்களில் விற்பனை செய்து வருகின்றனர். அதிகரித்துள்ள சர்க்கரை நோய் காரணமாக, வெள்ளை சர்க்கரையை விட நாட்டு சர்க்கரை, கருப்பட்டி போன்ற உடலுக்கு தீங்கிழைக்காதவற்றை வாங்க அதிகளவில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பதநீரை காய்ச்சி அதிலிருந்து கருப்பட்டி செய்யப்படுகிறது. அதிகளவில் மருத்துவ குணம் வாய்ந்ததாகவும் உள்ளது. கருப்பட்டி, சில்லு கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற மூன்று வகையான கருப்பட்டி விற்பனை செய்யப்படுகிறது, இதில் சில்லு கருப்பட்டியானது இஞ்சி, மிளகு, திப்பிலி சேர்த்து உள்ளதால் மருத்துவகுணம் வாய்ந்தது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பால் மற்றும் தேனீருடன் சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி கலந்து குடிக்கலாம். சக்கரை நோய் உள்ளவர்கள் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள கருப்பட்டி கலந்து பருகுகின்றனர்.

கருப்பட்டி வியாபாரம்

பனங்கருப்படியானது ரூ.250லிருந்து ரூ. 300 வரையிலும், சில்லுக்கருப்பட்டியும் ரூ.250 லிருந்து ரூ. 300 வரையிலும், பனங்கற்கண்டானது ரூ.350 முதல் ரூ.400 வரையிலும் விற்க்கப்படுகிறது.

கருப்பட்டி வியாபாரம்

தேசிய நெடுஞ்சாலத்தில் ஓரத்தில், கண்களை கவரும் வகையில் பனை கூடைகளில் வைத்து கருப்பட்டி விற்பனை செய்யப்படுவதால் ராமநாதபுரம் மாவட்டம் வரும் சுற்றுலா பயணிகள் வாகனங்களை நிறுத்தி கருப்பட்டி வாங்கி செல்வதாக வியாபாரிகள் கூறுகின்றனர்,

கருப்பட்டி வியாபாரம்

சிலர் கரும்புச் சக்கை மற்றும் வெள்ளைக்கட்டியுடன் வேதிப்பொருள் மற்றும் இஞ்சிச்சாற்றை கலந்து கருப்பட்டி என்று விற்பனை செய்கின்றனர். உண்மையான கருப்பட்டி எவ்வாறு கண்டுபிடிப்பது என்றால் நாம் சாப்பிடும் பொழுது தொண்டை பகுதிக்குள் செல்லும்போது சுவையும் பதனி மற்றும் நுங்கு போன்ற வாசனை வரக்கூடும் இதை வைத்து இது உண்மையான கருப்பட்டியா அல்லது போலியானதா என்று கண்டுபிடிக்கலாம் என்று வியாபாரி கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram