ஹோம் /ராமநாதபுரம் /

நவராத்திரி திருவிழா - ராமேஸ்வரம் உஜ்ஜையினி மாகாளி அம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

நவராத்திரி திருவிழா - ராமேஸ்வரம் உஜ்ஜையினி மாகாளி அம்மனுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் பால்குடம்

Ramanathapuram | ராமேஸ்வரம் சன்னதி தெருவில் அமைந்துள்ள உஜ்ஜையினி மாகாளியம்மன்ஆலயத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரம் சன்னதி தெருவில் அமைந்துள்ள உஜ்ஜையினி மாகாளியம்மன் ஆலயத்திற்கு நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடனாக பால்குடம் எடுத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் எதிரே சன்னதி தெருவில் அமைந்துள்ளது 200 வருடம் பழமைவாய்ந்த அருள்மிகு உஜ்ஜையினி மாகாளி அம்மன் ஆலயம்.

பால்குடம் எடுக்கும் சிறுவன்

இங்கு நவராத்திரி திருவிழா நான்காம் நாளில் போது பொதுமக்கள் வேண்டுதல் வேண்டி 47 வருடங்களாக நேர்த்தி கடனாக பால்குடம் எடுத்து வருவது வழக்கமாக ஒன்றாகும்.

சாமிக்கு பாலாபிஷேகம்

இந்நிலையில் கிழக்கு ரத வீதியில் அமைந்துள்ள சிங்கேரி மடத்தில் கலசத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு, 108 பால் குடங்கள் எடுத்து ராமநாதசுவாமி திருக்கோவில் நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் உலா வந்தனர்.

பக்தர்கள் வெள்ளம்

இதையடுத்து, பக்தர்கள் உலா வந்து கொண்டு வந்த பால்குடங்களை வைத்து உஜ்ஜையினி மாகாளியம்மனுக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு அதன் பிறகு சிறப்பு தீபாரதணை நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்று சென்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram