ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் நவராத்திரி திருவிழா: பர்வதவர்த்தினி அம்பாளின் ஸ்ரீ சக்கரத்திற்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம்

ராமேஸ்வரத்தில் நவராத்திரி திருவிழா: பர்வதவர்த்தினி அம்பாளின் ஸ்ரீ சக்கரத்திற்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம்

ராமேஸ்வரம்

ராமேஸ்வரம் கோவில் நவராத்திரி விழா

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீ சக்கரத்திற்கு  16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீசக்கரத்திற்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் நவராத்திரி விழா இருதினங்களுக்கு முன்னர் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இந்த விழாவானது 11 நாட்கள் நடைபெறும். புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்ததும் வரும் வளர்பிறை பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

கோவிலில் பக்தர்கள்

இந்த விழாவில் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டும். முதல் மூன்று நாட்கள் துர்க்கை வழிபாடு, இடையில் மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு, கடைசியில் மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு என்று மூன்று தேவிகளின் வழிபாடு முக்கியத்துவம் ஆகும்.

நவராத்திரி பூஜை

நெருப்பின் அழகு, ஆவேசப் பார்வை, வீரத்தின் தெய்வம், கொற்றவை, காளி என்று அழைப்பார்கள். வீரர்களின் தொடக்கத்திலும் முடிவிலும் வழிபாட்டுக்குரியவர் துர்க்கை. இவர் மகிஷாசூரன் என்ற அரக்கனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டதே நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகின்றது. வெற்றியை கொண்டாடிய 10 ஆம் நாள் விஜயதசமி நாள் ஆகும்.

ராமேஸ்வரம் கோவில்

இந்நிலையில், நேற்று நவராத்திரி விழாவின் முதலாம் நாள் விழாவாக காலை ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாளின் எந்திரமான ஸ்ரீ சக்கரத்திற்கு குருக்கள் பால், பன்னீர், தயிர், திரவியம், மஞ்சள், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் ஸ்ரீசக்கரம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து சென்றனர்.

மேலும் இன்று முதல் நாள்தோறும் இரவு 8:00 மணிக்கு ஸ்ரீ பர்வதவர்த்தினி அம்பாள், வரும் ஒன்பது நாட்கள் பல்வேறு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொண்டு அருள் பாலிப்பார்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram