ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | நவராத்திரி கொலு பொம்மைகளை எந்த வரிசையில் அடுக்க வேண்டும் தெரியுமா?

Ramanathapuram | நவராத்திரி கொலு பொம்மைகளை எந்த வரிசையில் அடுக்க வேண்டும் தெரியுமா?

கொலு

கொலு வழிபாடு

Ramanathapuram | ராமநாதபுரத்தில் பல வீடுகளிலும் கொலு பொம்மைகள் வைத்து நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

நவராத்திரி வந்தால் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து விசேஷமாக கொண்டாடப்படுகிறது. நவராத்திரி கொலு உருவான வரலாறு, கொலு பொம்மைகள் வைத்து வழிபட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.

நவராத்திரி என்பது 9 நாட்கள் நடைபெறும் திருவிழாவாகும். புரட்டாசி மாதம் அமாவாசை முடிந்ததும் வரும் வளர்பிறை பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை 9 நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.

மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வந்த மகிஷாசுரனை கலைமகள், அலைமகள், மலைமகள், ரூபமாக இணைந்து ஒன்பது இரவுகள் போரிட்டு வதம் செய்து கொன்றாள். அந்த வதம் செய்ததுதான் நவராத்திரியாக கொண்டாடப்பட்டு வருகிறது.‌ வெற்றியை கொண்டாடிய பத்தாம் நாள் தான் விஜயதசமி நாளாகும்.

கொலு பொம்மை வழிபாடு

மனிதனுள் இருக்கும் நல்ல எண்ணங்கள், திறமைகளை ஒன்றிணைத்து, கெட்ட எண்ணங்களை அழிப்பது தான் நவராத்திரி விழாவின் முக்கியத்துவமாகும்.

கொலு பொம்மைகள்

இந்த நவராத்திரி நாட்களில் வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு செய்கின்றனர். இவ்வாறு கொலு பொம்மைகள் வைத்து வழிபடுவதை பலரும் பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வருகின்றனர்.

கொலு பொம்மைகளை முறையான வரிசையில் வைக்கவேண்டும். மூன்று படிகள் முதல் 11 படிகள் வரை வைக்கப்படுகிறது. பாரம்பரியமாக தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வருபவர்கள் கொலு பொம்மைகளை வரிசைப்படி வைத்து வழிபாடு செய்கின்றனர்.

முதல் படியில் ஓரறிவு உயிரினங்களான மரங்கள், செடிகள், கொடிகள் ஆகியவை அடுக்க வேண்டும். இரண்டாம் படியில் இரண்டு அறிவு உயிரினங்களான நத்தை, சங்கு வைக்க வேண்டும்

மூன்றாம் படியில் மூன்று அறிவு உயிரினங்களான கரையான் எறும்பு வைக்கவேண்டும்

நான்காம் படியில் நான்கறிவு உயிரினங்களான கடலில் வாழும் நண்டுகள் மற்றும் வண்டுகள் வைக்க வேண்டும்.

ஜந்தாம் படியில் ஐந்தறிவு உயிரினங்களான பறவைகள் விலங்குகளை வைக்க வேண்டும்.

ஆறாம் படியில் ஆறறிவு உயிரினங்களான மனிதர்கள் தான். மனிதர்களின் பழக்கவழக்கங்கள், பண்பாடு, கலாச்சாரம் போன்றவையை தத்ரூபமாக நிரூபிக்கும் பொம்மைகளை வைக்கலாம்.

ஏழாம் படியில் மனிதர்களாக பிறந்து உயர்ந்த மகான்களாக நாம் வணங்குகின்றவர்களை வைக்கலாம்.

எட்டாம் படியில் பகவானின் அவதாரங்களை கூறும் வகையில் உள்ள பொம்மைகளை வைக்கலாம்.

ஒன்பதாம் படியில் ஒன்பதாம் நிலை முப்பெரும் தெய்வங்களான, லெட்சுமி, சரஸ்வதி, பார்வதி பொம்மைகளையும், விநாயகர் சிலையையும் வைக்க வேண்டும். இத்துடன் பூரணகலச கும்பத்தையும் வைக்க வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொரு நிலையாக பொம்மைகளை அடுக்கி வைப்பது கொலு வீடுகளில் வைக்கும் முறையாகும். இவ்வாறு தான் கொலு பொம்மைகள் வைத்து விசேஷமாக ஒவ்வொரு ஆண்டும் வழிபட்டு வருகின்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram