ஹோம் /ராமநாதபுரம் /

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம்.. பரமகுடியில் சிறார்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு.. 

தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பதக்கம்.. பரமகுடியில் சிறார்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு.. 

X
பரமகுடியில்

பரமகுடியில் சிறார்களுக்கு மேளதாளத்துடன் உற்சாக வரவேற்பு

Ramanathapuram District News : தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பதக்கம் வென்ற சிறார்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தேசிய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழகத்திற்கு வெண்கலம் வென்று சிறப்பித்த பரமக்குடியை சேர்ந்த 10 வயது சிறுமிக்கு மேளதாளங்கள் முழங்க பொதுமக்கள் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த குருநாதன் - கவிதா தம்பதியின் 10 வயது சிறுமி அனுஸ்ரீ. கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழகம் சார்பாக 10 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வென்றுள்ளனர்.

இதேபோல் 10 வயது சிறுவன் வசந்த் மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் சில்வர் பதக்கம் வென்றுள்ளார். இருவரும் போட்டியில் கலந்து கொண்டு பதக்கங்களை வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதையும் படிங்க : மீன்வளத் துறையை கண்டித்து ராமநாதபுரத்தில் மீனவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

இந்நிலையில், பதக்கங்கள் வென்று சொந்த ஊருக்கு திரும்பிய இருவருக்கும் மற்றும் பயிற்சியாளர்களுக்கும் ஸ்பார்க் கராத்தே அமைப்பு சார்பாக பூமாலை, சால்வை அணிவித்து மேளதாளங்கள் முழங்க குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பொதுமக்கள் சார்பாக பிரமாண்டமாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Ramanathapuram