ஹோம் /ராமநாதபுரம் /

ராமநாதபுரம் | தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

ராமநாதபுரம் | தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி

X
மாணவிகள்

மாணவிகள் பேரணி

Ramanthapuram | பரமக்குடியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடியில் தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அரசு பள்ளி மாணவிகள் நகர் பகுதி முழுவதும் மேளதாளத்துடன் பதாகைகள் ஏந்தியபடி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் சமூக பாதுகாப்பு துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு பேரணி மற்றும் பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த பேரணியை பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பரமக்குடி ரயில் நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவிகள் பதாகைகளை ஏந்தியபடி பரமக்குடி நகர் பகுதியில் ஊர்வலம் வந்தனர்.

இதனைத் தொடர்ந்து பேரணி நிறைவு பெற்று பள்ளிக்கு வந்த 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் உறுதிமொழி எடுத்தப்பின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த பேரணியில் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்கள், குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு பிரிவுனர், வருவாய்த்துறை, சமூக பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram