முகப்பு /ராமநாதபுரம் /

பரமக்குடியில் 200க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி..

பரமக்குடியில் 200க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்ற தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி..

X
தேசிய

தேசிய குடற்புழு நீக்க நாள் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

Ramanathapuram News | பரமக்குடியில் சௌவுராஷ்டிரா மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க நாள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 10 மற்றும் ஆகஸ்ட் 10ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய குடற்புழு ஒழிப்பு விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி நடைபெற்றது. இந்த மிதிவண்டி பேரணி பரமக்குடி சௌராஷ்ட்ரா மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கி பரமக்குடி பேருந்து நிலையம், ஓட்டப்பாலம், 5 முனை வழியாக சென்று துணை சுகாதார அலுவலகத்தில் நிறைவுபெற்றது.

இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு குடற்புழு நீக்க விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மாணவர்களுடன் பரமக்குடி உதவி ஆட்சியர் அப்தாப் ரசூல் மிதிவண்டி ஓட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதையடுத்து, பரமக்குடியில் ஒன்று முதல் 19 வயதுள்ள ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 988 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைவரும் தேசிய குடற்புழு நோய் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram