ஹோம் /ராமநாதபுரம் /

Ramanathapuram | தேசிய தடகளப் போட்டிகளில் பதக்கம்- ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவ, மாணவிகள்

Ramanathapuram | தேசிய தடகளப் போட்டிகளில் பதக்கம்- ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற மாணவ, மாணவிகள்

மாணவருக்கு

மாணவருக்கு பரிசளிக்கும் ஆட்சியர்

Ramanthapuram | மாநில, தேசிய அளவில் வெற்றி பெற்ற ராமநாதபுரம் மாவட்ட மாணவ, மாணவிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

ஆந்திரா மற்றும் கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தேசிய மற்றும் மாநில அளவிலான தடகளப் போட்டிகளில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தென்னிந்திய அளவிலான 33- வது தேசிய தடகளப் போட்டியானது ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள குண்டூரில் கடந்த மாதம் நடைபெற்றது.

இந்த போட்டியில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து 2000- த்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவிக்கு பதக்கம் அளிக்கும் ஆட்சியர்

இதில் கலந்து கொண்ட பரமக்குடியைச் சேர்ந்த அசுகரன் விளையாட்டு கழகத்தில் பயிற்சி பெறும் தடகள வீரர்கள் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு 1 வெள்ளி மற்றும் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

ஆட்சியருக்கு சால்வை அணிவிப்பு

இதையடுத்து, கிருஷ்ணகிரியில் நடைபெற்ற 36- வது மாநில அளவிலான தடகளப் போட்டிகள் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு ஓட்டப்பந்தயத்தில் இரண்டாம் இடமும், 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடைபெற்ற தடகளப் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

மாணவிக்கு பதக்கம் வழங்கும் ஆட்சியர்

இதையடுத்து, போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram