ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டk; நடைபெற்றது. இதில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், திருவாடானை, கமுதி, முதுகுளத்தூர், ஆகிய பகுதிகளில் இருந்து பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து புகார்களை மனுவாக அளித்தனர்.
குறைதீர்ப்பு கூட்டத்தில், ராமநாதபுரம் பேருந்து நிலைய பகுதியில் நரிக்குறவர் பெண் சரஸ்வதி என்பவர் பேருந்து நிலையத்தில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஊசி பாசி விற்றுக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அந்த நேரத்தில் மர்மநபர் ஒருவர் அந்த வாகனத்தை திருடி சென்று விட்டதாகவும் 80 ஆயிரம் ரூபாய் தவணைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வாங்கியதாகவும் கூறினர்.
மேலும், அந்த வாகனம் திருட்டு போன நிலையில் தவணை முறையில் பணம் கட்டுவதற்கு பணம் கொடுத்தவர்கள் நெருக்கடிக்கு ஏற்படுத்துவதால் உடனடியாக அந்த வாகனத்தை கண்டுபிடித்து தர வேண்டும் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதார் காவல் கண்காணிப்பாளர் புகார் மனு அளித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
குறைதீர்ப்பு கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துணை காவல் கண்காணிப்பாளரிடம் கொடுக்கப்பட்டு 15 நாட்களுக்கு அதற்கான தீர்வு எடுக்கப்படும் என்றும், இல்லை என்றால் மீண்டும் ஒருமுறை நேரில் வந்து மனு அளிக்க வேண்டும் என்று குறைதீர்ப்பு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Ramanathapuram