ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே நகரிகாத்தானில் தூய வனத்து அந்தோனியார் திருவிழா தேர்பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாடானை அருகே உள்ள நகரிகாத்தான் கிராமத்தில் தூய வனத்து அந்தோனியார் ஆலயம் உள்ளது.
இக்கிராமத்தை சுற்றியுள்ள பனிரெண்டு கிறிஸ்துவ கிராமங்களுக்கும் பங்கு தளமாக இது அமைந்துள்ளது. இக்கிராமத்தில் தூய வனத்து அந்தோணியாரின் ஆலய தேர்பவனி திருவிழா ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறுவது வழக்கம்.
ராமநாதபுரத்தில் இருந்து நகரிகாத்தான் செல்லும் வழி குறித்த கூகுள் வரைபடம்..
இதையடுத்து, இந்த வருட திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி நடைபெற்று வந்தது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு நகரிகாத்தான் பங்குத்தந்தை அருட்திரு சூசை மைக்கேல் தலைமையில் அருட் தந்தையர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினர்.
திருப்பலி முடிந்ததும் மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் தூய வனத்து அந்தோணியாரின் தேர்ப்பவனி நடைபெற்றது. இதில் அருட் சகோதரிகள் உட்பட இறை மக்கள் ஏராளமானோர் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.