ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய மர்மப் படகு... உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கிய மர்மப் படகு... உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் படகு

Rameshwaram Mysterious Boat | ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் கடற்கரையில்  கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு  படகை புகைப்படம் எடுத்தும் ஆச்சரியத்துடன் பார்த்த  மீனவர்கள் மற்றும் பொதுமக்கள். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மரத்தினால் செய்யப்பட்ட தெப்பம் படகு ஒன்று இரண்டு மணியளவில் கரை ஒதுங்கியது.

இதைப்பார்த்த மீனவர்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் படகினை தங்கச்சிமடம் காவல்துறையினர், கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினர், மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தெப்பப்படகினை பார்த்தபோது பருமிய‌ மொழியில் எழுதப்பட்டிருந்தது. மரத்தினால் ஆன தெப்பம் வடிவில் படகு வடிவமைக்கப்பட்டு, அதில் புத்தர் சிலை மற்றும் புத்தர் படங்கள், பூஜைப் பொருட்கள் மற்றும் அரிசி, காலணிகள், விசிறிகள் இருந்தது.

புத்த சிலை 

புத்தமத திருவிழாவின் போது மியான்மர் போன்ற நாடுகளில் தெப்ப படகுகளை தயாரித்து கடலில் விடுவது வழக்கம். இது போன்று ஆந்திராவிலும், நாகப்பட்டினத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மரப்படகுகள் கரை ஒதுங்கி உள்ளது.

கரை ஒதுங்கிய படகு

இந்த தெப்பம் மியான்மர் நாட்டில் இருந்து கடலில் நீரோட்டம் மற்றும் காற்றின் வேகம் காரணமாக திசை மாறி ராமேஸ்வரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரைக்கு வந்திருக்கலாம் என தெரியவருகிறது.

ராமேஸ்வரத்தில் சுற்றுலா பயணிகளுடன் பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்..

இதையடுத்து, கரை ஒதுங்கிய தெப்பப் படகை அப்பகுதி மீனவர்கள், பொது மக்கள், , வெளியூர் சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியத்துடன் பார்த்து அந்த தெப்ப படகினை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram