ஹோம் /ராமநாதபுரம் /

பரமக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 13 மாடுகளை பிடித்த நகராட்சி அதிகாரிகள்! 

பரமக்குடியில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிந்த 13 மாடுகளை பிடித்த நகராட்சி அதிகாரிகள்! 

X
மாடுகளை

மாடுகளை பிடித்து சென்ற அதிகாரிகள்

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அதிகளவு மாடுகள் சாலைகளில் சுற்றி திரிவதால், பொங்கல் பண்டிகைக்கு ஷாப்பிங் செல்லும் மக்களுக்கு இடையூறாக உள்ளது. இதனால் பெருமளவு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Paramakudi

பரமக்குடியில் நகராட்சி அதிகாரிகள், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக விபத்து ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து நகராட்சி வளாகத்தில் அடைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியானது, மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளது, பரமக்குடியில் சுற்றி நிறைய கிரமப்பகுதிகள் உள்ளது. தற்போது, பொங்கல் பண்டிகை என்பதால் பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பரமக்குடி பஜார் பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர் ‌

இந்நிலையில், சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடுகின்றனர். இந்த கால்நடைகள் குறிப்பாக மாடுகள் சாலையில் சண்டைப்போட்டு ஓடிக்கொண்டு இருப்பதால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் மீது விழுந்து விபத்துகள் ஏற்படுகின்றன. இரவு நேரங்களில் சாலைகளில் சுற்றி தெரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, சாலையில் விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் சுற்றி திரியும் மாடுகளை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பரமக்குடி சர்வீஸ் ரோட்டில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரிந்த 13 மாடுகளை நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து நகராட்சி வளாகத்தில் கட்டி வைத்துள்ளனர். உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து மாடுகளை இதுபோன்று சாலையில் அவிழ்த்து விடக்கூடாது என்று தெரிவித்து உரியவர்களிடம் ஒப்படைக்க உள்ளனர்.

First published:

Tags: Cow, Local News, Paramakudi Constituency, Ramanathapuram