Home /ramanathapuram /

முள்ளு கிளாத்தி மீன்‌ தெரியுமா? உடம்பெல்லாம் முள்ளு.. இதை எப்படி சாப்பிடுவது?

முள்ளு கிளாத்தி மீன்‌ தெரியுமா? உடம்பெல்லாம் முள்ளு.. இதை எப்படி சாப்பிடுவது?

ராமநாதபுரம்

ராமநாதபுரம் - முள்ளு கிளாத்தி மீன்

Trigger Fish | முள்ளு கிளாத்தி மீன்‌களை நேரடியாக சமையலுக்காக  பயன்படுத்தாமல் கருவாடாக மாற்றப்பட்டு சமையலுக்கு பயன்படுத்துகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram | Ramanathapuram
பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க  சென்ற மீனவர்களுக்கு, மன்னார் வளைகுடா ஆழ்கடல் பகுதியில் வாழும் முள்ளு கிளாத்தி மீன்‌கள் சுமார் 500 கிலோ வரையிலும் சிக்கியுள்ளன..  

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் மீன்பிடி துறைமுகத்தில் 90க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், 5000-ற்கும்  மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தல் தொழில் செய்து வருகின்றனர்.

மன்னார் வளைகுடா பகுதியில் மற்ற கடல் பகுதியை விட அரிதான கடல்வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இதனால் அங்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு அரிதான மீன்கள் கிடைக்கின்றன.  அந்த வகையில் மன்படம் மீனவர்களுக்கு சுமார் 500கிலோ வரையிலும் முள்ளு கிளாத்தி மீன்‌கள் சிக்கியுள்ளன.

முள்ளு கிளாத்தி மீன்


குளிர் நிறைந்த பகுதியில் இவை வாழாது. வெப்பம் நிறைந்த பகுதியில் தான் வாழும். இந்த வகை முள்ளு கிளாத்தி மீனானது இந்திய பெருங்கடல் மற்றும் பசுபிக் பெருங்கடல் மட்டும் காணப்படும் ஒரு வகையாகும்..

முள்ளு கிளாத்தி மீன்‌களை நேரடியாக சமையலுக்காக  பயன்படுத்தாமல் கருவாடாக மாற்றப்பட்டு சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். அதிக ஊட்டச்சத்து இதில் நிறைந்துள்ளது. கிளாத்தி மீனானது கோளாமீன், டிரங்மீன் போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.

முள்ளு கிளாத்தி மீன்


அதிகபட்சமாக 5 அங்குலம் நீளம் முதல் 10 அங்குலம் நீளம் வரை வளரக்கூடியது. தட்டையான உடலமைப்பு கொண்டு கொம்பு போன்ற முட்கள் கொண்டுள்ளது. செந்நிறமாக தோற்றம் கொண்டிருக்கும். சிறுமீன்கள், பாசிகளை இவை உணவாக எடுத்துக்கொள்கின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது. மண்டபத்தில் கிலோ 40 முதல் 45 வரை விலை போகின்றன
Published by:Arun
First published:

Tags: Local News, Ramanathapuram, Rameshwaram

அடுத்த செய்தி