Home /ramanathapuram /

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: துக்க நாளாக அனுசரிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் தமிழர் கட்சி..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: துக்க நாளாக அனுசரிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கும் தமிழர் கட்சி..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மலர்தூவி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; மலர்தூவி அஞ்சலி

Ramanathapuram District: 13 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனையில்  தெர்மாகோல் மூலம் படகு செய்து கடலில் விட்டு மலர்தூவி தமிழர் கட்சியினர் சார்பில்  அஞ்சலி செலுத்தி அனுசரிப்பு, 

    இலங்கையில் உள்நாட்டு போரின் போது ஈழத் தமிழர்களை கொத்து கொத்தாக முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டதை அடுத்து ஆண்டுதோறும் உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள ஈழத்தமிழர்கள் மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில்,  நேற்று மே 18- ஆம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தையொட்டி தமிழர் கட்சி சார்பில் அக்கட்சியின் மாநில செயலாளர் தீரன் திருமுருகன் தலைமையில் ஏராளமானோர் தனுஷ்கோடி அடுத்த அரிச்சல்முனை பகுதியில் பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் உருவ புகைப்படத்தை தெர்மாகோல் மூலம் உருவாக்கப்பட்ட படகில் வைத்து கடலில் விடப்பட்ட பின்னர் கடலில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ஈழத்தமிழர் நினைவாக கோஷங்கள் எழுப்பியதோடு, ராஜபக்ஜைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி தங்களுடைய கண்டனத்தை பதிவு செய்தனர்.


    தமிழர்கட்சி தீரன் திருமுருகன் கூறியதாவது:-

    மே 18 நினைவு தமிழின அழிப்பு நாளாக அறிவித்து அனுசரிப்பு விழாவாக தமிழக அரசு நடத்த வேண்டும், தமிழக முதல்வர் தமிழினத்தின் தலைவராகவும் தமிழகத்தின் முதல்வராக அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

    ஐநா மன்றத்தில் இந்திய அரசு தலையிட்டு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை சென்னையிலுள்ள மெரினா கடற்கரையில் அமைக்க வேண்டும்,

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் யாரெல்லாம் கலந்து கொள்ளமாட்டார்கள் என்று நினைத்தவர்கள் எல்லாம் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதனை தமிழக அரசு வேடிக்கை பார்க்காமல் ஒரு துக்க நாளாக அறிவித்து அறிக்கை விட வேண்டும் என தெரிவித்தார்.

    செய்தியாளர்:பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Mullivaikkal, Ramanathapuram

    அடுத்த செய்தி