முகப்பு /ராமநாதபுரம் /

தனுஷ்கோடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.. கடலில் மலர்தூவி மரியாதை செலுத்திய மீனவர்கள்..

தனுஷ்கோடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்.. கடலில் மலர்தூவி மரியாதை செலுத்திய மீனவர்கள்..

X
தனுஷ்கோடியில்

தனுஷ்கோடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Mullivaaikal Memorial Day : முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி தனுஷ்கோடி அரிச்சலமுனை கடலில் குழந்தைகள் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மீனவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

  • Last Updated :
  • Ramanathapuram, India

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அரிச்சலமுனை கடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலையொட்டி குழந்தைகள் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி மீனவர்கள் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போரின் போது ஈழத்தமிழர்களை முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்டதை ஆண்டுதோறும் மே 18-ம் தேதி அன்று உலக தமிழர்கள் மற்றும் இலங்கையில் உள்ள தமிழர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு தினமானது அனுசரிக்கப்படுகிறது.

இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் மே-18 முள்ளிவாய்க்கால் தினத்தன்று தனுஷ்கோடி அரிச்சலமுனை கடலில் மீனவர்களால் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு அனுசரிக்கப்படுவது வழக்கம்.

தனுஷ்கோடியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இதையடுத்து, இன்று குழந்தைகள், பொதுமக்கள் மற்றும் தனுஷ்கோடி மீனவர்கள் தர்மாகோலால் படகு போன்று செய்து, அதில் விடுதலை புலிகளின் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்படத்தை வைத்து கடலில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    மலர்தூவி அஞ்சலி செலுத்திய பிறகு ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தினர். இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நூற்றுக்குமேற்பட்டோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

    First published:

    Tags: Local News, Ramanathapuram