முகப்பு /செய்தி /ராமநாதபுரம் / சுழன்று அடித்த சூறைக்காற்று.. சின்னாபின்னமான 2000 வாழை மரங்கள்!

சுழன்று அடித்த சூறைக்காற்று.. சின்னாபின்னமான 2000 வாழை மரங்கள்!

வாழை மரங்கள் சேதம்

வாழை மரங்கள் சேதம்

ஏக்கருக்கு தல 20000 ரூபாய் வீதம் செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நாட்டு  வாழைக்காய் வாழை மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தது

  • Last Updated :
  • Ramanathapuram, India

சூறைக்காற்று, மழையால் 2000 வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்ததால் விவசாயி கவலை அடைந்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கோரைப்பள்ளம், ராமசாமி பட்டி, கிளாமரம், நீராவி ,மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அப்பகுதியில் நடவு செய்து அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த 2000 வாழை மரங்கள்  முறைந்தும்  வேரோடு சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தன .இதனால் அப்பகுதி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

ஒரு ஏக்கருக்கு தல 20000 ரூபாய் வீதம் செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நாட்டு  வாழைக்காய் வாழை மரங்கள் முறிந்தும் வேரோடு சாய்ந்து விழுந்து சேதம் அடைந்தது.  இதனால் வாழை நடவு செய்த  விவசாயிகள் கவலை அடைந்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

top videos
    First published:

    Tags: Ramanathapuram