Home /ramanathapuram /

ரூ.5 லட்சம் கொடுத்து தமிழகம் வந்துள்ளோம்.. பணம் இருந்தாலும் உணவு இல்லை - இலங்கை நிலையை தோலுரிக்கும் அகதிகள்..

ரூ.5 லட்சம் கொடுத்து தமிழகம் வந்துள்ளோம்.. பணம் இருந்தாலும் உணவு இல்லை - இலங்கை நிலையை தோலுரிக்கும் அகதிகள்..

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

Ramanathapuram District : இலங்கையிலிருந்து அகதிகளாக 3 குழந்தை உட்பட 2 குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு இன்று வருகை தந்துள்ளனர். மரைன் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பால், காய்கறி, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பொருட்கள் விலை கிடுகிடு என உயர்ந்து, பொருட்கள் எதையும் வாங்க வழியின்றி அங்குள்ள மக்கள் ஒருவேளை உணவுக்கே மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருவதை அடுத்து இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்கள் அகதிகளாக இந்தியாவிற்கு வருகின்றனர்.

அகதிகளாக இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு செல்லும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்யப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது, அங்குள்ள மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டும் , தங்களது எதிர்ப்பை தெரிவித்த அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது புதிய ஆட்சியும் நடந்து வருகிறது, அப்படியும் இன்னும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.

இன்று இரண்டு குடும்பத்தை மூன்று குழந்தை உட்பட எட்டு பேர் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வாழ வழியின்றி கடல் வழியாக ஆபத்தான முறையில் பயணம் செய்து தனுஷ்கோடி அரிச்சல்முனையில் வந்துள்ளனர்.


ராமேஸ்வரத்துக்கு வருகை தந்துள்ள அகதிகள்..


யாழ்ப்பாணம் வல்வெட்டிதுறையை சேர்ந்த லவேந்திரன் (24), சசிகலா (24), செல்வராஜா விஜயேந்திரன், (33), கமலராணி (42), ஜங்கரன் (19), ஸ்ரீராம் (14), நிலானி (09), கதிர் (02), இரண்டு குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியில் வந்தனர்.

இந்நிலையில், நேற்று இரவு 9 மணிக்கு கிளம்பி 1:30 மணிக்கு தனுஷ்கோடி வந்ததாகவும், ஒருவருக்கு தலா ஒரு லட்சம் கொடுத்து மொத்தமாக 5 லட்சம் கொடுத்ததாகவும் கூறினர். தொழில் செய்யவும் வழியில்லை என்றும் கையில் பணம் இருந்தால் சாப்பாடு கிடைக்கவில்லை என்று அரிசி கிலோ ரூ.450 க்கும் தேநீர் ரூ.150 க்கு விற்பதாகவும் கூறினர்.

அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தனுஷ்கோடி பகுதியை சேர்ந்த மீனவர்கள் அகதிகள் அங்கு வந்து இருப்பதை பார்த்த பின்பு கடலோர காவல் குழும போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து, அவர்களை மீட்டு தனுஷ்கோடி கடலோர காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், விசாரணைக்கு பின்னர் எட்டு பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

இதுவரை இலங்கையில் இருந்து அகதிகளாக 28 குடும்பத்தைச் சேர்ந்த 105 பேர் தமிழகம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Ramanathapuram, Rameshwaram, Srilanka

அடுத்த செய்தி