ஹோம் /ராமநாதபுரம் /

பசும்பொன் தேவர் ஜெயந்தி : சென்னை கண்ட்ரோல் ரூமிலிருந்து கண்காணிப்பு – சைலேந்திர பாபு தகவல்

பசும்பொன் தேவர் ஜெயந்தி : சென்னை கண்ட்ரோல் ரூமிலிருந்து கண்காணிப்பு – சைலேந்திர பாபு தகவல்

டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு

Devar Jayanthi | கடலாடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் அறுபதாவது குருபூஜை விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு நேரில் பசும்பொனில் இன்று ஆய்வு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kamuthi, India

கடலாடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 115ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60வது குருபூஜை விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பசும்பொனில் நேரில் இன்று ஆய்வு செய்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கடலாடியில் அமைந்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் 115ம் ஆண்டு ஜெயந்தி விழா மற்றும் 60ம் ஆண்டு குருபூஜை விழா யாகசாலை பூஜையுடன் இன்று காலை தொடங்கியது.

இதையடுத்து, இன்று முதல் மூன்று நாட்கள் நடைபெறும் நிகழ்ச்சியில் நாளை (30ம் தேதி) அரசு விழாவாகவும் நடைபெறுகிறது. இதில் அரசியல் கட்சி தலைவர்கள் சமுதாய தலைவர்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு பசும்பொன் கிராமத்தில் ஆய்வுசெய்து, கண்ட்ரோல் ரூம் உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் பார்வையிட்டார்.

இதையும் படிங்க : இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.1.64 கோடி‌ மதிப்பு கடல் அட்டைகள் பறிமுதல்... கடலோர காவல்படை அதிரடி...

மேலும் பொதுமக்கள் மரியாதை செலுத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் சுமார் 10,000 காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும், 14 இடங்களில் ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணி மேற்கொண்டு நேரடியாக சென்னையிலிருந்து இதை கண்காணிக்கும் வகையில் சிறப்பு கண்ட்ரோல் ரூம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .

இந்த ஆய்வில் காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க். டிஐஜி மயில்வாகனன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தங்கதுரை மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Published by:Karthi K
First published:

Tags: Devar Jayanthi, Local News, Ramnad