தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த பகுதியானது, காற்றுழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது.
ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை முடியுபெற்றது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது, அதன்பின் கிழக்கு திசையின் காற்றின் வேகம் காரணமாக கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலோர பகுதிகளில் மிதமான மழை பெய்தது.
இந்நிலையில் தற்போது தென்கிழக்கு வங்ககடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என்றும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையடுத்து, இன்று காலை முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், அக்காள் மடம், தனுஷ்கோடி, மண்டபம் முகாம் வரையிலான பகுதிகள் மிதமான மழை பெய்ய தொடங்கியது. திடீரென பெய்யத் தொடங்கிய மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.
பள்ளமான பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது, திட்டக்குடி சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் தடுமாறி விழுந்து காயம் ஏற்பட்டது. சேதமடைந்த சாலைப் பகுதியில் மழைநீர் தேங்கினால் உடனடியாக அப்புறப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைக்கின்றனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Rain, Ramanathapuram