ஹோம் /ராமநாதபுரம் /

ராமேஸ்வரம் தீவு பகுதியில் அதிகாலை முதல் பெய்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம் தீவு பகுதியில் அதிகாலை முதல் பெய்த மழை- பொதுமக்கள் மகிழ்ச்சி

X
ராமநாதபுரம்

ராமநாதபுரம் மழை

Ramanathapuram Rains | ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், அக்காள்மடம், பாம்பன், செம்மமடம் ஆகிய அதிகாலையில் இருந்து தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் அதிகாலையில் இருந்து ராமேஸ்வரத்தில் தொடர்ச்சியாக மிதமான மழை பெய்தது.

கடந்த சில நாட்களுக்கு முன் வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது கிழக்கு திசையின் காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை வரை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமானது  அறிவித்திருந்தது.

இந்நிலையில், காற்றின் வேகம் மாறுபாட்டினால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், தங்கச்சிமடம், அக்காள்மடம், பாம்பன், செம்மமடம் ஆகிய பகுதிகளில் அதிகாலையில் இருந்து தொடர்ச்சியாக மிதமான மழை பெய்து வருகிறது. இரவில் பனி பெய்து வந்தது. காலையில் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

இதையடுத்து, சாலையில் மழைநீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி உள்ளது‌, பனியுடன் சேர்ந்து மழை பெய்து வருவதால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர்.

ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளி ராமருக்கு தீர்த்தவாரி உற்சவம்

மேலும், இன்று முதல் நாளை வரை இரண்டு நாட்களுக்கு இலங்கையை ஒட்டி உள்ள தென்மேற்கு வங்ககடலில் 40 கிலோ மீட்டர் முதல் 60கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியாளர்: மனோஜ், ராமநாதபுரம்.

First published:

Tags: Local News, Ramanathapuram