கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி 2021- 2022 திட்டத்தை இன்று காணொலி காட்சி மூலம் துவங்கி வைத்தார் முதல்வர்
மு.க.ஸ்டாலின்.
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியத்திற்கு உட்பட்ட வண்ணாங்குண்டு ஊராட்சியில் உள்ள சமுதாயக்கூடத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2021 - 2022 ஆண்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் இன்று காலை 10.00 மணியளவில் துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தி.மு.க மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா, முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத் முன்னிலையில் இந்த காணொளி நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரத்தில் 64 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பயனாளிகளுக்கு இலவச இயந்திரங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்பட்டது மேலும் மாவட்ட கழக செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பயனாளிகளின் இடத்தில் தென்னை மரக் கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர்.
தமிழ்நாடு அரசால் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட கானொளி நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் பிரவீன்குமார்,செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், ஒன்றியகுழு தலைவர் புல்லாணி,வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், மற்றும் பயனாளிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
உங்கள் நகரத்திலிருந்து(Ramanathapuram)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.