முகப்பு /ராமநாதபுரம் /

பரமகுடியில் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம்- காணொளி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

பரமகுடியில் தொடக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம்- காணொளி மூலம் அடிக்கல் நாட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

X
அடிக்கல்

அடிக்கல் நாட்டு விழா

Ramanathapuram | ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் தொடக்கப்பள்ளியில் புதிய கட்டிடத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Ramanathapuram, India

பரமக்குடி அருகே தெய்வேந்திரநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சேதமடைந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெய்வேந்திரநல்லூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி 1962-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். 16 மாணவர்கள், மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

பள்ளிக் கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால் ஆறு மாதங்களாக மாணவர்கள் மற்றும் மாணவிகள் அங்கன்வாடி மையத்தில் கல்வி பயின்று வந்தனர். மேலும், புதிய கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ.1 கோடியை தாண்டியது

இந்நிலையில், தெய்வேந்திரநல்லூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 103.55 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு இதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து காணொளி காட்சி மூலம் பள்ளியின் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

First published:

Tags: Local News, Ramanathapuram