Home /ramanathapuram /

தவறுதலாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகளால் சுற்றுலா பயணிகள் குழப்பம்

தவறுதலாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகளால் சுற்றுலா பயணிகள் குழப்பம்

தவறுதலாக

தவறுதலாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகைகள்; சுற்றுலா பயணிகள் குழப்பம்

Ramanathapuram District: ராமேஸ்வரத்தில் நெடுஞ்சாலைதுறை சார்பில் தவறுதலாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகை, குழப்பத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் திருத்தம் செய்ய  வலியுறுத்தல் 

    ராமேஸ்வரத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் தவறுதலாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகை, குழப்பத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் திருத்தம் செய்ய வலியுறுத்தல்

    ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரம் நகர்ப்பகுதி முழுவதும் ஒவ்வொரு சுற்றுலா தளத்திற்கும் செல்வதற்காக சுற்றுலா பயணிகளுக்கு ஏதுவாக நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் வருகின்ற வாகனத்திற்கு நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படும் இடத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வழிகாட்டி பலகை வைக்கப்பட்டுள்ளது, அதில் தனுஷ்கோடி, அரிச்சல்முனை பகுதியை தவறுதலாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டு அம்புக்குறிகள் காட்டப்பட்டுள்ளது.

    மேலும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்ட வழிகாட்டுதலின்படி அம்புக்குறிகள் காட்டப்படுவது இந்து அறநிலையத் துறையின் தங்கும் விடுதியை காட்டுகிறது.
    இதனால் ராமேஸ்வரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த குழப்பத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

    இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தவறுதலாக வைக்கப்பட்ட வழிகாட்டி பலகையை திருத்தம் செய்ய வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    செய்தியாளர்: பூ.மனோஜ்குமார், ராமநாதபுரம்.
    Published by:Arun
    First published:

    Tags: Ramanathapuram, Rameshwaram

    அடுத்த செய்தி