Home /ramanathapuram /

Ramanathapuram | பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

Ramanathapuram | பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர் ராஜகண்ணப்பன்

அமைச்சர்

அமைச்சர் ராஜ கண்ணப்பன்

ராமநாதபுரம் மாவட்டம் பரமகுடியில் பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கிவைத்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Paramakudi, India
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டித் திட்டத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்து பள்ளி மாணவர்கள் மாணவியர்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.

அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசால் தொடக்கப்பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மதுரையில் தொடங்கி வைத்தார்.

காலை உணவை உண்ணும் அமைச்சர்


இதனையடுத்து ராமநாதபுரத்தில் உள்ள ஏழு நகராட்சி தொடக்கப் பள்ளிகளில் 988 மாணவ - மாணவிகள் பயன்பெறும் வகையில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

காலை உணவு தொடக்க விழா


காலை உணவு திட்டத்திற்காக பரமக்குடி நகராட்சியில் ஆறு பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டன. இந்த ஆறு பள்ளிகளிலும் மொத்தம் 956 மாணவர்கள் பயில்கின்றனர்.

இதையடுத்து, பரமக்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டத்தினை தொடங்கி வைத்தார். காலை உணவு தயாரிப்பதற்காக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் ஜானீ டாம் வர்கீஸ், முதன்மை கல்வி அலுவலர், எம்.எல்.ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், நகராட்சி ஆணையாளர் திருமால் செல்வம், நகர்மன்ற தலைவர் சேது கருணாநிதி மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி