Home /ramanathapuram /

பாம்பன் தூக்கு பாலம் கால்வாயை ஆழப்படுத்தும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

பாம்பன் தூக்கு பாலம் கால்வாயை ஆழப்படுத்தும் பணி குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

தூக்குப் பாலத்தை பார்வையிடும் எ.வ.வேலு

தூக்குப் பாலத்தை பார்வையிடும் எ.வ.வேலு

பொதுப்பணித்துறை  மற்றும் சிறு துறைமுகங்களின்  அமைச்சர் ஏ.வ.வேலு இன்று மாலை ராமேஸ்வரம் அடுத்த பாம்பன்  சாலை பாலம் மற்றும் இரயில் தூக்கு பாலத்தை ஆய்வு செய்தார்.

பொதுப்பணித்துறை மற்றும் சிறு துறைமுகங்களின் அமைச்சர் ஏ.வ.வேலு இன்று மாலை ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் சாலை பாலம் மற்றும் ரயில் தூக்கு பாலத்தை ஆய்வு செய்தார். இரண்டு நாட்கள் பயணமாக வந்துள்ள அவர் நான்கு முக்கிய திட்டத்தினை ஆய்வு செய்ய உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் சாலை பாலத்தில் இருந்து ரயில் தூக்கு பாலம் கால்வாயை 10 அடி தூரத்திற்கு ஆழப்படுத்தும் பணியின் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் கடற்கரையில் இயங்கிக் கொண்டிருக்கும் சுற்றுலாப் படகு துறைமுகத்தை விரிவுபடுத்துவது குறித்தும் தனுஷ்கோடியில் இருந்து இலங்கை தலைமன்னார் வரை 1964- ம் ஆண்டு ஏற்பட்ட புயலுக்கு முன்பு இருந்த கப்பல் போக்குவரத்தை மீண்டும் துவங்குவது குறித்தும், ராமேஸ்வரம் துறைமுகத்தில் புதிய நிர்வாக அலுவலகம் அமைப்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள உள்ளேன் என்றார்.

அமைச்சர் எவ வேலு


மேலும், இந்த நான்கு புதிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடைபெற்ற உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய அரசின் சிறுதுறைமுகங்கள் அமைச்சரவை மாநாடு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நமது துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொண்டோம்.

அமைச்சர் எவ வேலு


அப்போது நான் சாகர்மாலா திட்டத்தின் கீழ் 100 சதவீதம் மானியத்தில் பணம் அளித்தால் பாம்பன் தூக்கு பாலத்தின் கீழ் கடலில் 10 அடி ஆழப்படுத்தினால் மேலும் சிறிய சரக்கு கப்பல்கள் சுற்றி செல்லாமல் இவ்வழியாக செல்ல உதவியாக இருக்கும் என்று கேட்டுக்கோண்டேன் என்றார்.

அமைச்சர் எவ வேலு


இதற்காக ஆய்வு மேற்கொண்டு எவ்வளவு பணம் செலவாகும் என்பதை திட்டமிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், பணிகள் முடிந்த பிறகு மத்திய அரசுக்கு கடிதம் எழுதி நேரடியாக சந்தித்து அதற்கு வேண்டிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட உள்ளது என்றார்.

அமைச்சர் எவ வேலு


இதையடுத்து பாம்பனிலிருந்து புறப்பட்ட அமைச்சர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தேசிய நினைவு இடத்தை பார்வையிட்டார். நாளை காலை ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஆட்சியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு இதரதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி