ஹோம் /ராமநாதபுரம் /

‘அதிமுகவை காப்பாத்துங்க’.. அன்வர் ராஜா சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு!

‘அதிமுகவை காப்பாத்துங்க’.. அன்வர் ராஜா சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் ராமநாதபுரத்தில் பரபரப்பு!

X
அதிமுக

அதிமுக போஸ்டர்

ADMK Anwar Raja | ராமநாதபுரம்: கட்சியை காப்பாற்றுங்கள் என மாவட்டம் முழுவதும் அன்வர் ராஜா தரப்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது .

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நம் கட்சி தலைவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள், கட்சியை காப்பாற்றுங்கள் என முன்னாள் எம்.பி அன்வர் ராஜா எம்ஜிஆர் பிறந்தநாளுக்கு பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் போஸ்டர் ஒட்டியுள்ளார்.

ஜனவரி 17-ம் தேதி எம்.ஜி.ஆர்-ன் 106 வது பிறந்தநாள் நாள் ஆகும். கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். இதேபோல் முன்னாள் எம்பி அன்வர் ராஜா சார்பில் மாவட்டம் முழுவதும் பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில் \"தலைவா..நம் கட்சி தலைவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ள நீதிமன்றங்களில் போராடுகின்றார்கள் \" நாங்கள் கட்சியை காப்பாற்ற உங்களிடம் மன்றாடுகின்றோம்.. காப்பாற்றுங்கள்\" என்ற வாசகம்அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது

உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு தொடர்பாக தொடர் விவாதங்கள் நிறைவடைந்து தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் கட்சியை காப்பாற்றுங்கள் என மாவட்டம் முழுவதும் அன்வர் ராஜா தரப்பில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது .

First published:

Tags: ADMK, Anwar raja, Local News, Poster, Ramanathapuram