Home /ramanathapuram /

ராமேஸ்வரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மருத்துவ முகாம்- 300 பேருக்கு அறிகுறி

ராமேஸ்வரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மருத்துவ முகாம்- 300 பேருக்கு அறிகுறி

மருத்துவ

மருத்துவ முகாம்

Ramanthapuram | ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஏழு பள்ளிகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rameswaram, India
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் உச்சிப்புளி பகுதியில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை அடுத்து இன்று தமிழகம் முழுவதும் ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு குழந்தைகளுக்கு பரிசோதனைகள் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்திருந்தார்.

மாணவனுக்கு மருந்து வழங்கும் அலுவலர்


இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் அடுத்த உச்சிப்புளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து மருத்துவ குழுவினர், உச்சிப்புளியில் உள்ள ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி, இரட்டையூரனி அரசு மேல்நிலைப் பள்ளி, கோரவயல் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் வெள்ளாரி ஓடை அரசு தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மருத்துவ முகாம் நடத்தினர்.

மாணவனுக்கு பரிசோதனை


ராமேஸ்வரத்தில் புனித ஜோசப் மேல்நிலைப்பள்ளி, புதுரோடு உயர்நிலை பள்ளி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளில் முகாம் நடந்தது.

மாணவிக்கு பரிசோதனை


மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் பரிசோதனை மற்றும் காய்ச்சலுக்கு உண்டான அறிகுறிகள் பற்றி மருத்துவ குழுவினர் முழுமையாக பரிசோதனை நடத்தி பின்னர் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினர்.

இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது உடல்நிலையை பரிசோதனை செய்து சென்றனர். இதில் 300-க்கும் அதிகமான பள்ளி மாணவர்கள் , மாணவிகளுக்கு காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.
Published by:Karthick S
First published:

Tags: Local News, Ramanathapuram

அடுத்த செய்தி