ஹோம் /ராமநாதபுரம் /

பாம்பன் - தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

பாம்பன் - தங்கச்சிமடம் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் நோய் தொற்று அபாயம்

X
தேசிய

தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள்; இன்னல்களுக்கு உள்ளாகும் வாகன

pamban bridge Suffering from meat waste | இறைச்சி கழிவுகளால் நாய்கள் அதிகளவில் சுற்றி சாலைகளில் சண்டையிட்டு வருவதால் வாகன ஓட்டிகள் தொடர்ந்து விபத்துக்களை சந்தித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram, India

பாம்பன் பாலத்தில் இருந்து தங்கச்சிமடம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் துர்நாற்றம் வீசி வருவதோடு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், தங்கச்சிமடம், அக்காள் மடம் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் கடைகளில் மிஞ்சும் கழிவு இறைச்சிகளை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கொட்டுகின்றனர்.  இதனால் அந்த கழிவுகளை உண்பதற்கு காகங்கள், கழுகுகள், நாய்கள் அந்த பகுதி முழுவதும் சுற்றி திருந்து சாலைகளில் சண்டை போட்டுக்கொண்டு வாகன ஓட்டிகள் வாகனங்களில் வந்து விழுந்தது விபத்துகள் ஏற்படுத்துகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட இருசக்கர வாகனத்தில் பாம்பன் பாலத்தில் இருந்து பாம்பன் பகுதிக்கு சென்றவர் மீது கழுகு இறைச்சி உண்ண வந்து இறக்கை வைத்து அடித்தில் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது.  மேலும் பாம்பன் பாலத்தில் கடல் அழகு மற்றும் மூன்று போக்குவரத்து பகுதிகளையும் காண்பதற்கு சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு பாம்பன் பாலத்தில் சென்று பார்க்கின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், அப்பகுதியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகள் துர்நாற்றம் வீசுவதாலும் சுகாதார சீர்கேடாகவும் இருப்பதால் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் அளவிற்கு உள்ளது. இதனைத் தடுக்க அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், காவல்துறையினரிடம் பல மனுக்கள் கொடுத்து எச்சரிக்கை பலகைகள் வைத்தும் எந்தவொரு பலனும் இல்லாமல் மீண்டும் மீண்டும் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் அப்ப்குதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Ramanathapuram