ஹோம் /ராமநாதபுரம் /

கடன் தொல்லையால் மரத்தில் தூக்கிட்ட கொத்தனார்.. பரமக்குடியில் அதிர்ச்சி!

கடன் தொல்லையால் மரத்தில் தூக்கிட்ட கொத்தனார்.. பரமக்குடியில் அதிர்ச்சி!

கடன் தொல்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு மரத்தில் தூக்கிட்டு கொத்தனார் தற்கொலை.

கடன் தொல்லை கடிதம் எழுதி வைத்துவிட்டு மரத்தில் தூக்கிட்டு கொத்தனார் தற்கொலை.

தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Ramanathapuram | Paramakudi

பரமக்குடியில் கடன் தொல்லையால் கொத்தனார் ஒருவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பர்மா காலனி சேர்ந்தவர் கணேசன் (47). இவருக்கு 3 பிள்ளைகள் உள்ளது. கொத்தனாராக பணிபுரிந்து வந்த இவர், சுற்றுவட்டார பகுதியில் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியுள்ளார்,

கடன் கொடுத்தவர்கள் அனைவரும் கொடுத்த பணத்தை திரும்பி கேக்கவே, திரும்பி கொடுக்க பணம்‌ இல்லாததால் சிறிது நாட்களாகவே கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும், தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

இதையும் படிங்க | தண்ணீர் கேனில் பக்கா பார்சலாக வந்த ரூ.300 கோடி போதைப்பொருள்.. மடக்கிப்பிடித்த போலீஸ்!

அதில், வாங்கிய கடனுக்கு மேல் வட்டி செலுத்தியதாகவும், கடனாக வாங்கிய பணத்தை செலுத்த முடியாமல் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்வதாகவும், மனைவி, பிள்ளைகளை கடன் கொடுத்தவர்கள் தொந்தரவு செய்ய வேண்டாம் என எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

First published:

Tags: Local News, Paramakudi Constituency, Ramanathapuram, Suicide