ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள வேதாளை கிராமத்தில் சுமார் 3000-ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த வேதாளை பகுதியில் மீன்கள், நண்டு, கணவாய் போன்ற கடல் உணவுகளை வெளிநாடுகளுக்கு பேக்கிங் செய்து அனுப்பும் கம்பெனிகள் அதிகம் உள்ளன.
இந்த கம்பெனிகளுக்கு இப்பகுதியில் இருந்து ஏராளமானோர் வேலைக்காக இருசக்கர வாகனத்திலும், நான்கு சக்கர வாகனத்திலும், சரக்குகளை ஏற்றிக்கொண்டு கனரக வாகனங்களிலும் செல்கின்றனர்.
ராமேஸ்வரம் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து வேதாளை ஊராட்சிக்கு செல்லும் சாலையில் சாலை அரிப்புகள் ஏற்பட்டு குறுகிய சாலையாக உள்ளது. ஒரு நேரத்தில் ஒரு நான்கு சக்கர வாகனம் மட்டுமே செல்லக்கூடிய நிலை உள்ளது. இருசக்கர வாகனத்தில் செல்லும்போது எதிரே ஏதேனும் நான்கு சக்கர வாகனம் வந்தால் இறங்கி செல்லும் நிலையால் மண்ணில் சிக்கி விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது. இச்சாலையில் இதுவரை பல விபத்துகள் ஏற்பட்டு, அவற்றில் இரண்டு மரணங்களும் நிகழ்ந்துள்ளன.

வேதாளை சாலை..
அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளதால், இச்சாலையில் செல்லும் போது வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்வதாக கூறுகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து புகார் கூறியும், எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது குறித்து வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் கூறுகையில்:-
மண் அரிப்பால் குறுகிய சாலை ஓரத்தில் இருக்கும் பள்ளத்தை சரிசெய்து பேவர் ப்ளாக் போன்ற சாலையை அமைக்க வேண்டுமெனவும், ஆக்கிரமிப்புகளால் சாலையும் குறுகி உள்ளது என்று பலமுறை மாவட்ட நிர்வாதிடமும் கிராம மக்களுடன் சென்று மனு அளித்துள்ளேன்.

வேதாளை சாலை..
இந்த சாலையில் எதிரே வரும் பெரிய வாகனங்களை எதிர்கொள்ள முடியாமல் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பலர் கீழே விழுந்துள்ளனர். இரு உயிர் பலியும் ஏற்பட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மேலும் சாலையை அகலப்படுத்தினால் விபத்துகளை தடுப்பதோடு மட்டுமில்லாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலை அரிப்பையும் தடுக்கமுடியும் என்றார் அவர்.
உங்கள் நகரத்திலிருந்து(ராமநாதபுரம்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.